உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வாகன இறக்குமதிக்கு தடை நீக்கம்

வாகன இறக்குமதிக்கு தடை நீக்கம்

கொழும்பு, நம் அண்டை நாடான இலங்கையின் பொருளாதாரம் பெரும்பாலும் சுற்றுலா வருமானத்தை நம்பியுள்ளது. இந்நிலையில், 2020ல் கொரோனா தொற்று காரணமாக சுற்றுலா துறை முடங்கியது. இதனால் இலங்கை வசமிருந்த டாலர் மதிப்பு குறைந்தது. இதனால் அந்நாட்டின் பணமதிப்பு வீழ்ச்சி கண்டது.அந்நிய செலாவணி இருப்பு கரையாமல் இருப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன் ஒரு பகுதியாக வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகே வாகன இறக்குமதிக்கான தடையை நீக்குவதாக பார்லிமென்டில் நேற்று அறிவித்தார்.இருப்பினும், இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் வாகனங்களை மூன்று மாதங்களுக்குள் விற்பனை செய்திருக்க வேண்டும். இல்லையெனில் கூடுதல் வரி விதிக்கப்படும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. தேவைக்கு அதிகமாக இறக்குமதி செய்யக்கூடாது என்பதற்காக இந்த நிபந்தனை விதிக்கப்பட்டிருப்பதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ