உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் திருமணத்துக்கு வெனிஸ் மக்கள் எதிர்ப்பு

அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் திருமணத்துக்கு வெனிஸ் மக்கள் எதிர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வெனிஸ்: உலகின் மூன்றாவது பெரிய கோடீஸ்வரான, 'அமேசான்' நிறுவனர் ஜெப் பெசோஸ், 61. கடந்த மே நிலவரப்படி இவரின் சொத்து மதிப்பு 18 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல். இவர் 1993-ல் மெக்கன்ஸி ஸ்காட் என்பவரை மணந்தார். இவர்களுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர்.ஜெப் பெசோஸ் - ஸ்காட் இருவரும் இணைந்து, 1994-ல் அமேசானை துவங்கினர். ஸ்காட் நிறுவனத்தின் முதல் கணக்காளராக இருந்தார். வணிகத் திட்டங்கள் மற்றும் ஆரம்பகால நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகித்தார்.இந்த ஜோடியின் திருமண உறவு, 25 ஆண்டுகளுக்கு பின், 2019ல் முறிந்தது. அப்போது அமேசானின், 2.66 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 4 சதவீத பங்குகளை ஸ்காட்டுக்கு ஜெப் பெசோஸ் பிரித்து வழங்கினார். உலகின் மிக விலையுயர்ந்த விவாகரத்துகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. அதன் பின், 55 வயதான முன்னாள், 'டிவி' நிருபர் லாரன் சான்செஸை காதலித்தார். இவரும் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர். இருவரின் திருமணம் இத்தாலியின் வெனிசில் உள்ள தீவில் வரும் 24 முதல் 26 வரை மூன்று நாட்கள் நடக்க உள்ளது. மொத்தம், 100 கோடி ரூபாய் செலவில் மிக ஆடம்பரமாக இந்த திருமணம் நடக்க உள்ளது. இதற்காக வெனிசின் அனைத்து நட்சத்திர விடுதிகள், படகு டாக்சிகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கு உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறுகையில், 'கோடீஸ்வரர்களின் திருமணங்களால் வெனிசில் விலைவாசி உயர்கிறது.'சுற்றுலா தொழிலையே நாங்கள் நம்பி உள்ளோம். இத்தகைய திருமணம் எங்களின் இயல்பு வாழ்க்கையை கடுமையாக பாதிக்கிறது' என்றனர். அத்துடன் 'பெசோசுக்கு இடமில்லை' மற்றும் 'வெனிஸ் விற்பனைக்கு அல்ல' போன்ற முழக்கங்களுடன் எதிர்ப்பு பிரசாரத்தை முன்னெடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

நிக்கோல்தாம்சன்
ஜூன் 15, 2025 15:34

சத்தமா சொல்லுங்க பொதுமக்களே


Ramesh Sargam
ஜூன் 15, 2025 12:19

அமேசான் மூலம் பொருட்கள் வாங்குபவர்களுக்கு அழைப்பு வருமா?


Columbus
ஜூன் 15, 2025 10:39

He is going to spend Rs 100 Cr. To that extent the economy of Venice will benefit. Why oppose.


Senthoora
ஜூன் 15, 2025 13:40

அவர் சொந்தமாக உழைத்த காசு, அணிக்கு கொடுத்ததுபோல அமெரிக்க அரசு அவருக்கு கடன் நிவாரணம் கொடுக்கவில்லை, அம்பானி வீடு திருமணத்தின் செலவு பற்றி சொல்லமாட்டீர்களா?


PR Makudeswaran
ஜூன் 15, 2025 09:35

தமிழ் நாட்டில் என்ன செய்தாலும் வாய் மூடி மௌனம் காப்பார்கள்.


Kasimani Baskaran
ஜூன் 15, 2025 06:25

பணக்காரர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்... அதற்க்கு உதாரணம் டிரம்ப் மற்றும் எலன் மஸ்க்.


மீனவ நண்பன்
ஜூன் 15, 2025 07:41

தலைகீழா நின்னுக்கிட்டு தண்ணி குடிக்க முடியுமா ?


Kasimani Baskaran
ஜூன் 15, 2025 10:47

மாற்றி யோசிக்கும் திறன் இவர்களுக்கு ஏராளம். உதாரணத்துக்கு - தண்ணீரை குளுக்கோஸாக இரத்தத்தில் செலுத்திக்கொள்வார்கள். சிந்தனையே வேறு விதமாக இருக்கும்..


Senthoora
ஜூன் 15, 2025 13:43

அப்போ அம்பானி வீடு திருமணம் பரவாய் இல்லையா? அவர் வங்கிக்கடன் நிவாரணம் அமெரிக்காவிடம் கேட்கவில்லையே?


புதிய வீடியோ