மேலும் செய்திகள்
என்.எல்.சி., யில் சுரங்க பாதுகாப்பு வார விழா
16-Sep-2025
கராகஸ்: வெனிசுலாவில் கனமழை காரணமாக, சுரங்கம் இடிந்து விழுந்ததில் 14 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.வெனிசுலா நாட்டில் சட்ட விரோதமாக தங்க சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஏராளமானோர் பணியாற்றி வருகிறார்கள். கராகஸிலிருந்து தென்கிழக்கே சுமார் 850 கிலோமீட்டர் (528 மைல்) தொலைவில் உள்ள கல்லோ நகரில் அமைந்துள்ள சுரங்கத்தில் தொழிலாளர்கள் வழக்கம் போல் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது கனமழை காரணமாக, சுரங்கத்தில் ஒரு பாதி இடிந்து விழுந்தது. அதில் பல தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்புக் குழுவினர் விரைந்தனர். அவர்கள் நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர். இந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். அவர்களது உடலை இடிபாடுகளில் இருந்து மீட்பு படையினர் மீட்டனர்.தற்போது விபத்து நிகழ்ந்துள்ள தங்கச் சுரங்கத்தை நம்பி, 30 ஆயிரம் மக்கள் தங்களது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். வெனிசுலாவில் செம்பு, வைரம் மற்றும் பிற விலைமதிப்பற்ற உலோகச் சுரங்கங்களால் நிறைந்துள்ளது. அங்கு சட்டவிரோத சுரங்கங்கள் செயல்பட்டு வருவதால் அவ்வப்போது உயிரிழக்கும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது.
16-Sep-2025