உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஈக்வடாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 6.3 ஆக பதிவு

ஈக்வடாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 6.3 ஆக பதிவு

குயுட்டோ; ஈக்வடாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் நிலநடுக்கங்கள் அடிக்கடி ஏற்படுவது உண்டு. அந்த வகையில் இன்று (ஏப்.25) அங்குள்ள கடற்கரையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. எல்லை மாகாணமான எஸ்மராஸ்டாசில் 35 கி.மீ.,ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.3 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி இருப்பதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் அறிவித்துள்ளது. தலைநகர் குயுட்டோவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. ஆனால் அதன் எதிரொலியாக ஏதேனும் பாதிப்புகள், சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் ஏற்பட்டதா என்ற தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை