உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / குற்றச்செயல்களில் ஈடுபட்டால் விசா ரத்து; இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை

குற்றச்செயல்களில் ஈடுபட்டால் விசா ரத்து; இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை

புதுடில்லி: அமெரிக்காவில் குற்றச்செயல்களில் ஈடுபட்டால் விசா திரும்பப் பெறப்படும் என்று இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவில் உள்ள டார்க்கெட் டிபார்ட்மென்ட் ஸ்டோரில் இந்திய பெண் ஒருவர் சுமார் 7 மணிநேரம் பொருட்களை வாங்குவது போல நடித்துள்ளார். பிறகு, சுமார் ரூ.1.10 லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடிக்கொண்டு, அங்கிருந்து வெளியேற முயன்றுள்ளார். இதை கண்டறிந்த ஊழியர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். விரைந்து வந்த போலீசார், அந்தப் பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது, தான் எடுத்து வந்த பொருட்களுக்கு பணம் செலுத்த அந்தப் பெண் தயாராக இருந்த போதும், போலீசாருக்கு அவருக்கு கைவிலங்கிட்டு, போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். கடந்த மே 1ம் தேதி நடந்த இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. எச்சரிக்கைஇந்த நிலையில், குற்ற செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டவர்களின் விசா ரத்து செய்யப்படும் என்று இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து விடுத்துள்ள எக்ஸ் தளப்பதிவு:அமெரிக்காவில் திருட்டு, கொள்ளை, தாக்குதல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுடன், விசாவும் ரத்து செய்யப்படும். எதிர்காலத்தில் அமெரிக்கா நுழைவதற்கான விசாவை பெறும் தகுதியை இழக்க நேரிடும். அமெரிக்காவின் சட்டம் மற்றும் ஒழுங்கை வெளிநாட்டவர்களும் மதித்து, கடைபிடிக்க வேண்டும், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Ganapathy
ஜூலை 17, 2025 14:26

அமெரிக்காவில் திருடிய இந்திய பெண்ணின் வீடியோ வைரல் இப்போது. அமைதியாக திருடிய அவள் பெயர் ஜமீஷா.


ஜெகதீஸ்வரன் தண்டபானி
ஜூலை 17, 2025 12:45

இதை நம் நாடு வெளி நாட்டில் இருந்து இந்தியா வந்தவர்களுக்கு சொன்னால், காங்கிரஸ் திமுக கட்சிகள் வெளிநாட்டவர்க்கு ஆதரவா வக்காலத்து வாங்கும்?


P. SRINIVASAN
ஜூலை 17, 2025 12:39

உலகமே அமெரிக்காதான? தொடர்ந்து அமெரிக்கா இந்தியாவை மிரட்டும் போடு ஏன் நம் மந்திகள் மற்றும் அதிகாரிகள் வாயை திறப்பதில்லை?


Srinivasan Krishnamoorthy
ஜூலை 17, 2025 13:57

What is wrong with this instruction ? America is doing correctly to fix anti nationals


cpv s
ஜூலை 17, 2025 14:48

what sucking purpose going to america, this kind of dogs must be arrest and put in the jail min 25yrs


Ganapathy
ஜூலை 17, 2025 12:39

சுய ஒழுக்கம் இல்லாதவர்களால்தான் நமது நாட்டிற்கே அவமானமும் கெட்டபெயரும் உண்டாகிறது. ஆனால் அதை அந்த சிறுமதியினர் என்றுமே உணராமல் தான் செய்த செயலை நியாயப்படுத்துகின்றனர் சமூக வலைதளங்களில்.


Ramesh Sargam
ஜூலை 17, 2025 12:11

அங்கேயும் நம்மவர்கள் திருட்டில் ஈடுபட்டு இந்தியாவின் நல்ல பெயரை கெடுக்கிறார்களே. இவர்களை என்னதான் செய்வது?


SANKAR
ஜூலை 17, 2025 12:29

Americans themselves do it get caught and punished.this is called shoplifting under a psychological condition called kleptomania.funny thing is. even rich is no exception.but I am not justifying it.visa cancellation is correct.apparently she is not green card holder


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை