உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உக்ரைன் உடனான போர்; ரஷ்யா மீது புதிய பொருளாதார தடைகளை விதித்தது ஐரோப்பிய ஒன்றியம்

உக்ரைன் உடனான போர்; ரஷ்யா மீது புதிய பொருளாதார தடைகளை விதித்தது ஐரோப்பிய ஒன்றியம்

மாஸ்கோ: ரஷ்யாவின் எரிசக்தி வருவாயை குறைக்கும் வகையில் கூடுதல் பொருளாதார தடை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது.உக்ரைன் மீது தொடர்ந்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்காக ரஷ்யா மீது இன்னும் பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறி வருகிறார். இது தொடர்பாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகையில், ' அமைதி குறித்து புடின் பேசுகிறார். ஆனால், உக்ரைன் மீது தொடர்ந்து குண்டு வீசுகிறார்.குறிப்பிட்ட நாட்களுக்குள் உக்ரைன் மீது போரை நிறுத்தாவிட்டால் ரஷ்யா மீது கடுமையான வரி விதிக்கப்படும்' என எச்சரித்து இருந்தார். இந்நிலையில், ரஷ்யாவின் எரிசக்தி வருவாயை குறைக்கும் வகையில் கூடுதல் பொருளாதார தடை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது. ரஷ்யா போரை முடிக்கும் வரை, ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் எனத் தெரிவித்து உள்ளது.இது குறித்து,ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் காஜா கல்லாஸ் கூறியதாவது: ஐரோப்பா உக்ரைனுக்கான ஆதரவில் பின்வாங்காது. ரஷ்யா தனது போரை முடிவுக்குக் கொண்டுவரும் வரை ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து அழுத்தத்தை அதிகரிக்கும். புதிய எண்ணெய் விலை வரம்பு உட்பட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வோம். இவ்வாறு அவர் கூறினார். உக்ரைன் அதிபர் வரவேற்பு ரஷ்யாவிற்கு விதிக்கப்பட்ட புதிய பொருளாதார தடைகளை உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி வரவேற்றுள்ளார். மேலும் ஜெலென்ஸ்கி கூறியதாவது:தீவிரமான ரஷ்ய தாக்குதல்களுக்கு மத்தியில், சரியான நேரத்தில் மற்றும் அவசியமான நடவடிக்கை. ரஷ்யாவின் போரின் அனைத்து உள்கட்டமைப்புகளும் தடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். சட்டவிரோதமானவை இது தொடர்பாக, ரஷ்ய செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியதாவது: ஐரோப்பிய ஒன்றிய நடவடிக்கை, ஒருதலைப்பட்ச கட்டுப்பாடுகள் சட்டவிரோதமானவை என்று நாங்கள் கருதுகிறோம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

M Ramachandran
ஜூலை 19, 2025 01:00

இது சொல்வார் பேச்சை கேட்டு தன் தலையில் தானெ நெருப்பை கொட்டி கொள்ளும் செயல் . இந்தியாவில் பெட்ரோல் விலை குறைவு UK யில் 135 முதல் 137 வரை. டீசல் இன்னும் அதிகம். கொழுப்பெடுத்த ராணுவ செலவு செய்தால் அது அந்த மக்களின் தலையில்தான் விழும். இங்கு வரி கட்டு வோர்க்கு ஒரு சலுகையும் லையய் ஆனால் வெளி நாட்டிலிருந்து அழையா விருந்தாளியாக அகதி என்ற போர்வயில் முல்லா ஓதி பலசலுகைக்கள் பெறுகிறார்கள் . அயர்லாந்தில் இன்னும் மோசம்.


yts
ஜூலை 18, 2025 20:15

பத்தோடு பதினொன்று.ஆனால் இதை ரஷ்யா கண்டு கொள்ளப்போவதில்லை!


Anand
ஜூலை 18, 2025 19:06

இதனால் ஐரோப்பிய ஒன்றியத்தில் எரிபொருள் பற்றாக்குறை மற்றும் விலை உயர்வு ஏற்பட்டு அதன் பொருளாதாரம் மேலும் மோசமடையும். தனக்கு இரண்டு கண்கள் போனாலும் பரவாயில்லை, எதிரிக்கு ஒரு கண் போகவேண்டும் என்கிற புதுமொழியை உருவாக்குவார்கள் போல..


தாமரை மலர்கிறது
ஜூலை 18, 2025 18:53

ரசியாவை பத்து துண்டுகளாக உடைத்து, அங்குள்ள கச்சா, காஸ் போன்றவற்றை ஆப்பிரிக்காவில் திருடுவது மாதிரி திருட ஐரோப்பா திட்டமிடுகிறது. அதற்காக உக்ரைன் போரை தொடக்கி, ரசியாவின் பொருளாதாரத்தை சிதைக்க திட்டமிட்டுள்ளது.


Sarathy
ஜூலை 18, 2025 19:14

Very true sir


முக்கிய வீடியோ