உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நாங்களும் பாத்துட்டே தான் இருக்கிறோம்: வங்கதேச விவகாரத்தில் வாய் திறந்தது ஐ.நா.,

நாங்களும் பாத்துட்டே தான் இருக்கிறோம்: வங்கதேச விவகாரத்தில் வாய் திறந்தது ஐ.நா.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நியூயார்க்: வங்கதேசத்தில் நிலவி வரும் அசாதாரண சூழலை உன்னிப்பாக கவனித்து வருவதாக ஐ.நா., அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.தொடர்ந்து 15 ஆண்டுகள் வங்கதேசத்தின் பிரதமர் என அசைக்க முடியாத சக்தியாக இருந்த ஷேக் ஹசீனா இன்று அரசியல் அகதியாக தஞ்சம் புகும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார். சகோதரி ஷேக் ரேஹானா இங்கிலாந்து குடியுரிமை பெற்று இருப்பதால் அவருடன் ஷேக் ஹசீனா செல்ல உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.அவரின் எதிர்கால நிலைமை என்ன என்பது பற்றிய உறுதியான தகவல்கள் எதுவும் இல்லாத நிலையில் வங்கதேசத்தில் தற்போதைய சூழலை உன்னிப்பாக கவனித்து வருவதாக ஐ.நா., சபை கூறி உள்ளது.

உன்னிப்பாக கவனிக்கிறோம்

இது குறித்து ஐ.நா.,பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டெரசின் செய்தித் தொடர்பாளர் பர்ஹான் ஹக் கூறி இருப்பதாவது: தெற்காசிய நாடுகளில் ஒன்றான வங்கதேசத்தில் தற்போது உள்ள அரசியல் சூழலையும், அங்கு நிலவும் பதற்றத்தையும், அரசியல் நெருக்கடியையும் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.அமைதியை நிலைநாட்ட ஒத்துழைக்குமாறு வங்கதேசத்தின் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். டாக்காவிலும், நாட்டின் மற்ற நகரங்களிலும் உள்ள மக்களையும் காக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளோம் என்று கூறி உள்ளார்.

நாங்க இருக்கோம்: அமெரிக்கா ஆதரவு

'வங்கதேச மக்களுக்கு ஆதரவாக இருப்போம். வன்முறையை தவிர்க்குமாறு மக்களை கேட்டுக்கொள்கிறோம்' என அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் தெரிவித்தார். தற்போதைய வங்கதேச நிலைமை குறித்து, அவர் கூறியதாவது:

வன்முறை வேண்டாம்...!

பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ஷேக் ஹசீனா வங்கதேசத்தை விட்டு வெளியேறியதாக அறிவித்ததை நாங்கள் பார்த்தோம். நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். வங்கதேச மக்களுக்கு ஆதரவாக இருப்போம். வன்முறையை தவிர்க்குமாறு மக்களை கேட்டுக்கொள்கிறோம். கடந்த பல வாரங்களாக நடந்த வன்முறையால் பலர் உயிரிழந்தனர்.

வருத்தமாக இருக்குது...!

வரும் நாட்களில், மக்கள் அனைவரும் அமைதியாகவும், நிதானமாகவும் இருக்க வேண்டும். இடைக்கால அரசு அமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டதை, நாங்கள் வரவேற்கிறோம். கடந்த வாரங்களில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் பற்றிய தகவல்களை கேட்டு நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

Ganesh Ragupathy
ஆக 09, 2024 07:15

உலக அமைதிக்கு ஆரம்ப காலத்திலிருந்து உலக இறையாண்மையையும் முயற்சிகளையெல்லாம் அட்டைதாரர்கள் நல்ல அணுகுமுறைகளும் நடந்துவருகிறது இதன் ஒரு அச்சம்தான் அண்டைநாட்டு பிரதமருக்கு தற்காலிக அடைக்கலம் அசட்டுத்தனமான.


Kanns
ஆக 07, 2024 07:32

Watching No Use.


M NARAYANAN
ஆக 06, 2024 19:03

பங்களாதேஷ் ஒரு ஜனநாயக நாடு என்பது ஒரு பொய்யான பிம்பமாகும். பங்களாதேஷ உருவான பின அங்கே நான்குமுறை ராணுவப் புரட்சி நடந்துள்ளது. இதை எப்படி ஜனநாயக நாடாக கருத முடியும். திருமதி ஷெய்க் ஹஸீனா ஓரளவு நிலையான ஆட்சியை நடத்தியதும், இந்தியாவிடம் நட்பு பாராட்டியதும் சீனா மற்றும் பாகிஸ்தான் கண்களை உறுத்தின. மாணவர்கள் போராட்டம் எனறு ஆரம்பித்த விஷயத்தில் சீனா பாகிஸ்தான் ஆசி பெற்ற இஸ்லாமிய தீவிர மதவாதிகள் ஊடுறுவி கலவரத்தை கலவரமாக ஊதி விட்ட நெருப்புதான் அங்கே பற்றி எரிகிறது.


sabitharaja
ஆக 06, 2024 18:44

வங்கதேச கலவரத்திற்கு சீனாவும் பாக்கிஸ்தான் காரணமாக இ௫க்கும் அல்லது மியன்மர் வங்கதேச ஒ௫ பகுதி இணைத்து அமெரிக்கா ஒ௫ தளத்தை அமைக்க வி௫ம்பியது அது நடக்கவில்லை அதன் காரணமாக இ௫க்கலாம்..


Muniandy Muthappen
ஆக 06, 2024 14:44

தூண்டி விட்டது சீனா,அமெரிக்கா


N.Purushothaman
ஆக 06, 2024 14:24

இது ஒன்னும் புதுசு இல்லையே ....பார்த்துகிட்டே இருங்க


UTHAYA KUMAR
ஆக 06, 2024 13:01

சொந்த நாட்டு ராணுவ வீரர்களை கொல்லுகின்ற கூட்டம். பங்களாதேஷ் அழிவு ஆரம்பம்..


subramanian
ஆக 06, 2024 12:12

ஐ நா சபை , சீனாவின் கைக்கூலியாக உள்ளது.


SS
ஆக 06, 2024 11:20

ஆச்சரியமாக உள்ளது. தொடர்ந்து 4 முறை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியில் இருந்த பிரதமர் இன்று நாட்டை விட்டு வெளியேறும் நிலை எப்படி உருவானது?வெளிநாட்டு சதி உள்ளதா?


M NARAYANAN
ஆக 06, 2024 19:49

நான்கு முறை ராணுவப்புரட்சி நடந்த நாடு எப்படி ஜனநாயக நாடாக இருக்க முடியும். இது முன்பு ஆங்கிலேயர்கள் ஆட்சியில் மத அடிப்படையில் இந்தியாவின் வங்காளத்திலிருந்து தனியாகப் பிரிக்கப்பட்ட பிரதேசம். பிறகு பாகிஸ்தான் உருவான போது அதன் பகுதியாக கிழக்கு பாகிஸ்தான் என்று இருந்தது. அதன் பிறகு இந்தியா தலையிட்டு பங்களாதேஷ் உருவானது. ஷெய்க் ஹஸீனா ஆட்சியில் இந்தியாவோடு இணக்கமாக இருந்தது. இந்தியாவில் இப்போது முன்னேற்றப் பாதையில் செல்வதை விரும்பாத சீனா, பாகிஸ்தான். இட ஒதுக்கீட்டுக்கு எதிரான மாணவர்கள் போராட்டம். போராட்டம் ஓரளவு அடங்கியது தீய சக்திகளுக்கு ஏமாற்றம். அணைந்த போராட்டத் தீயை, தீய சக்திகள் ஊதிப் பெரிதாக்கியது. விளைவு இந்தியாவுக்கு இனி புதிய தலைவலி. பங்களாதேஷ் இனி இலங்கை, மாலத்தீவு, நேபாளம் வரிசையில் சேரும். கலகத்தின் விதை எப்போதோ ஊன்றப்பட்டு விட்டதென்று புரிகிறதா


தஞ்சை மன்னர்
ஆக 06, 2024 11:05

ஹி ஹி ஒன்றிய அரசுக்கு எதிராக நடந்து இருக்கும் போராட்டம் இது நினைவில் வைத்து கொள்ளுங்கள்


Kumar Kumar
ஆக 06, 2024 12:06

திராவிஷ மாடல்...


subramanian
ஆக 06, 2024 12:11

ஹி ஹி ஹி இங்கு வாலை ஆட்டினால் சுட்டு தள்ள வேண்டும்


ஆரூர் ரங்
ஆக 06, 2024 12:25

ஆமாம் இடஒதுக்கீடுக்கு எதிரான போராட்டம் இது. மொழியால் பிரிந்த வங்கதேசம் போலவே இங்கும்( ஹிந்தி எதிர்ப்பு)மொழிப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு ( அதாவது திமுக ஆட்களுக்கு) இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. அங்கு நடந்த போராட்ட மாற்றம் இங்கும் வராமல் போகாது.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ