உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / காசாவை எங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவோம்; இஸ்ரேல் பிரதமர் திட்டவட்டம்

காசாவை எங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவோம்; இஸ்ரேல் பிரதமர் திட்டவட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெருசலேம்: 'நாங்கள் போரை கைவிட மாட்டோம். காசாவில் உள்ள அனைத்துப் பகுதிகளையும் இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரும்' என அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் படையினருக்கும் இடையே கடந்த 2023ல் துவங்கிய போர் இன்னும் நீடித்து வருகிறது. காசாவில், இஸ்ரேல் தரைவழி தாக்குதலை துவங்கியுள்ளது.இதில், 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக காசா சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இன்று (மே 19) வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:சண்டை தீவிரமாக உள்ளது. நாங்கள் முன்னேறி வருகிறோம். காசாவின் அனைத்துப் பகுதிகளையும் கட்டுப்பாட்டில் கொண்டு வருவோம்.நாங்கள் போரை கைவிட மாட்டோம். வெற்றியை நோக்கி பயணிப்போம்.அதே நேரத்தில், பஞ்சத்தைத் தடுக்க காசா பகுதிக்குள் மனிதாபிமான அடிப்படையில் உணவு அளிக்க அனுமதிக்கப்படும். காசா மக்கள் உணவின்றி பஞ்சத்தில் மூழ்க அனுமதிக்கக் கூடாது. இஸ்ரேல் மக்கள் கூட, பட்டினியால் காசா மக்கள் அவதிப்பட்டு வருவதை பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். இவ்வாறு பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

அப்பாவி
மே 20, 2025 10:24

ஹிட்லர் இப்பிடித்தான் ரஷ்யாவை கட்டுப்பாட்டிற்குள் கொண்டாருவேன்னு போனாரு. திரும்பவே இல்லை. அமெரிக்கா கால வாரிச்சின்னா நேத்தன் யாஹூவும், இஸ்ரேலும் காணாமப் போக வாய்ப்பு இருக்கு.


Rathna
மே 19, 2025 19:57

ஒரு கர்ப்பமான இஸ்ரேலிய பெண்ணை குழந்தை பிறக்கும் சமயத்தில் ஹமாஸ் தீவிரவாதிகள் கொன்று உள்ளனர். இறந்த தாயிடம் இருந்து குழந்தையை ஆபரேஷன் மூலம் பிறக்க செய்து அதை காப்பாற்ற டாக்டர்கள் போராடி வருகின்றனர்.


Sudha
மே 19, 2025 18:20

சபாஷ் என்று சொல்ல தோன்றுகிறது. நாமும் ஒரு நாள் ஆக்ரமிப்பு காஷ்மீரை மீட்டு விடுவோம். ஆனால் எல்லாவற்றையும் விட அமைதியும், நாட்டு மக்களிடம் பாதுகாப்பும் மிக முக்கியம். நடுவர் எனும் போர்வையில் உள்ள கீழ்த்தர நாடுகளை புறந்தள்ளி நமது வெற்றியை நிலைநாட்ட வேண்டும்


sankaranarayanan
மே 19, 2025 18:17

நாங்கள் போரை கைவிட மாட்டோம். காசாவில் உள்ள அனைத்துப் பகுதிகளையும் இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரும் என அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இதேபோன்று பாகிஸ்தான் அபகரித்துள்ள இந்திய பாக்கியதோயையும் இந்தியா ஒரே நாளின் கைப்பற்ற வேண்டும் நமது கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும் இதற்குப்போய் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை அணுக வேண்டாம் அவர் எப்படி கனடா 51-வது மாகாணம் என்று கூறும்போது நாம் இதை நிறைவேற்றயே காண்பித்தால் என்ன


ASIATIC RAMESH
மே 19, 2025 18:14

ஏன், இங்கு இஸ்ரேலுடன் பெரியண்ணன் வர்த்தக டீலிங் செய்யவில்லையா ? அல்லது உடந்தையா?