உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இரண்டே நிமிடங்களில் நூடுல்ஸ் ஆக்கிவிடுவோம்: ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு டிரம்ப் எச்சரிக்கை

இரண்டே நிமிடங்களில் நூடுல்ஸ் ஆக்கிவிடுவோம்: ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு டிரம்ப் எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நியூயார்க்: அமைதி ஒப்பந்தத்தை மீறினால், இரண்டே நிமிடங்களில் அழித்து விடுவோம் என்று ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையே, இரண்டு ஆண்டுகளாக போர் நடந்து வந்தது. https://www.youtube.com/embed/bWdgIXqOjEUஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சியால், தற்போது தற்காலிகமாக போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. பல நாடுகளின் தலைவர்கள் முன்னிலையில், அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில், காசாவில் ஹமாஸ் மற்றும் உள்ளூர் அமைப்பினர் இடையே மோதல் வெடித்தது. போரின் போது, இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி, எட்டு பேருக்கு ஹமாஸ் தரப்பில் மரண தண்டனை சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது. மேலும் அங்கி ருந்த இஸ்ரேல் ராணுவத்தினர் மீது ஹமாஸ் குண்டுகள் வீசியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வெள்ளை மாளிகையில் நடந்த தீபாவளி கொண்டாட்டத்தில் உரையாற்றிய டிரம்ப், ஹமாஸ் பயங்கரவாதிகளுக் கு எச்சரிக்கை விடுத்தார். இது குறித்து அவர் கூறுகையில், அவர்கள் மிகவும் நல்லவர்களாகவும் நேர்மையாகவும் இருப்போம் என்று ஒப்புக் கொண்டார்கள். காசா மக்களை கொல்வதை நிறுத்தாவிட்டால், ஹமாஸ் பயங்கரவாதிகளை அழிப்பதைத் தவிர வேறு வழியில்லை. ஹமாஸ் அமைப்பினர் சரியானதை செய்வார்கள் என்ற நம்பிக்கை இன்னும் உள்ளது. அமைதி ஒப்பந்தத்தை மீறினால் அல்லது மோசமாக நடந்து கொண்டால், இரண்டே நிமிடங்களில் அவர்களை முடித்துவிடுவோம், என, குறிப்பிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

bharathi
அக் 23, 2025 14:34

Remain as a joker


SUBRAMANIAN P
அக் 23, 2025 13:54

இரண்டே நிமிடங்களில் நூடுல்ஸ் ஆக்கிவிடுவோம்: ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு டிரம்ப் எச்சரிக்கை - டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு ஒன்னு பார்சேல்


பேசும் தமிழன்
அக் 23, 2025 19:14

அமைதி ஒப்பந்தத்தில் சொன்னபடி நடக்கவில்லை என்றால் தான் அழித்து விடுவோம் என்று கூறி இருக்கிறார்.... உங்கள் வசதிக்காக அவர் கூறிய முழு வாக்கியத்தை கூறாமல்.... உங்களுக்கு தேவையானவற்றை மட்டும் வெட்டி ஓட்டு வேலை பார்த்து இருக்கிறீர்கள் !!!


Yaro Oruvan
அக் 23, 2025 13:19

பேசிக்கிட்டே இருக்கானே ஒழிய பாம்ப விடமாட்டிங்கிறானே அது இருக்கட்டும் .. ஆல்ரெடி காசா நூடுல்ஸ் மாதிரிதான இருக்கு.. மறுபடியும் நூடுல்ஸ மாவாக்கி உருட்டி ப்புறம் மறுபடி நூடுல்ஸ் பிலிவீங்களோ என்னமோ போங்க உங்களுக்கும் அந்த ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் மத்தில அப்பாவி காசா மக்கள் நொந்து நூடுல்ஸ் ஆயிட்டாங்க உண்மையிலேயே


bharathi
அக் 23, 2025 10:59

First control the weapon culture in your territory.


Ramalingam Shanmugam
அக் 23, 2025 10:55

என்ன கிழிச்சீங்க சார் 20 வருடம்


Anand
அக் 23, 2025 10:27

பாஞ்சு நாள் நாராயணசாமி போல பேசுகிறார். காமெடி பீசு.


V K
அக் 23, 2025 10:25

ஐந்து வருடம் முன்பு டிரம்ப் க்கு திமுக அடையாள அட்டை கொடுத்த பொழுது நினைதேன் அமெரிக்காவிலும் விடியல் குடும்ப ஆட்சி வரும் என்று


bharathi
அக் 23, 2025 10:08

Today's blabbering


Harindra Prasad R
அக் 23, 2025 10:07

வாய்க்கு வந்தபடி கோமாளி போல் பேசி அமெரிக்கா அதிபர் நாற்காலியின் மரியாதையை டம்மி ஆக்கி விட்டார் இந்த டிரம்ப் அவர்கள் ...


Abdul Rahim
அக் 23, 2025 09:50

காமடி நூடூல்ஸ் ஆகி ரொம்ப நாள் ஆச்சு.....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை