உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அதானி மீதான குற்றச்சாட்டு பின்னணியில் இருப்பது யார்; ரஷ்ய ஊடகம் பரபரப்பு தகவல்!

அதானி மீதான குற்றச்சாட்டு பின்னணியில் இருப்பது யார்; ரஷ்ய ஊடகம் பரபரப்பு தகவல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லண்டன்: சுதந்திரமான கொள்கை முடிவுகளை எடுக்கும் இந்தியாவை அச்சுறுத்தி தன் வழிக்கு கொண்டு வரும் நோக்கத்துடன் தான், தொழிலதிபர் அதானி மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக ரஷ்ய ஊடகம் பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி, சூரிய ஒளி மின்சாரம் தொடர்பான திட்டங்களை அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து பெற்றதாகவும், அந்தத் திட்டங்களுக்காக அமெரிக்காவில் முதலீடுகளை திரட்டியதாகவும், அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, அதானிக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் திடுக்கிடும் காரணங்கள் உள்ளதாக ரஷ்யாவின் ஸ்புட்னிக் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0a860cug&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அமெரிக்காவின் முடிவுகளை ஏற்காமல் சுதந்திரமான கொள்கை முடிவுகளை எடுக்கும் இந்தியாவை வழிக்கு கொண்டு வருவதற்காக, அந்நாட்டு அரசு அதிகாரிகள் செய்துள்ள திட்டமிட்ட சதி இது என்று ஸ்புட்னிக் தெரிவித்துள்ளது.கவுதம் அதானி, ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் பல்வேறு மிகப்பெரிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். உலகின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவர். அவர் மீது நடவடிக்கை எடுத்தால், இந்திய அரசு வழிக்கு வந்துவிடும் என்ற எண்ணத்தில் இத்தகைய நடவடிக்கையை அமெரிக்காவில் ஆட்சியில் இருக்கும் ஜனநாயக கட்சி அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.சமீபத்தில் அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் டிரம்ப் வெற்றி பெற்றார். அவரது வெற்றிக்கு கவுதம் அதானி எக்ஸ் தளத்தில் வெளிப்படையாக வாழ்த்து தெரிவித்தார். இதுவும் அமெரிக்க ஆளும் கட்சிக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியது. அதற்கு பழி வாங்கும் நோக்கத்துடன் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், ஸ்புட்னிக் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சர்வதேச அளவில் இந்தியாவின் செல்வாக்கு அதிகரிப்பதை தடுக்கவும், உலக அரங்கில் வலிமையான போட்டி குரலாக இந்தியா ஒலிப்பதை முடிவு கட்டவும் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதானி மீது குற்றச்சாட்டு எழுப்பி இந்திய பங்குச் சந்தையை சரியச் செய்வது, அதன் மூலம் இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் எல்ஐசி ஆகிய நிறுவனங்களை சீர்குலைப்பதும் அமெரிக்க சதித் திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் என்றும் ஸ்புட்னிக் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 119 )

gayathri
டிச 09, 2024 09:45

யாராக இருந்தால் என்ன சம்பவம் உண்மையா பொய்யா என்பதே கேள்வி


Sampath Kumar
டிச 05, 2024 16:35

வடிகட்டின பொய் கடைந்து ஏடுத்த அய்யோக்கியத்தனம் உங்களின் சப்போர்ட் செய்தி இதனால் சரிந்த இந்த களவாணி பயலை சீர் ஐயா முடியாது அதற்கு ஈக்கள் சொல்லும் கரணம் பொய் பித்தலாட்டத்தை சா கட்டம் கோயபல்ஸ் பிரச்சாரம் செய்வது வாங்கின திட்டுக்கு விசுவாசத்தை காட்டுகிறது போல உள்ளது அசிங்கம்


gayathri
நவ 29, 2024 09:42

இவர்கள் இரெண்டு நாட்டுக்கும் உள்ள பகையை இந்த திருடனை வைத்து பேசுகிறார்கள்


joe
நவ 29, 2024 15:51

அதானியின் தொழில் உள்ள பையர் நடை முறை தெரியாமல் பலரும் பல கருத்துக்களை தெரிவிக்கிறார்கள் .இதே போல மல்லையா தொழில் பற்றிய நடவடிக்கையும் தெரியாமல் இன்னும் அந்த தொழிலதிபர்களை தவறான கண்ணோட்டத்தோடு பழி சுமத்துகிறார்கள் .இந்த இந்தியாவில் மற்ற தொழிலதிபர்களுக்கும் இந்த நிலைமை சீக்கிரம் வரப்போகுது.


Senthoora
நவ 28, 2024 06:51

அதானி செய்த ஊழல்களால் இந்தியாவில் பலருக்கு நஷ்டம் இருக்கு, அதில் நீங்களும் நஷ்டம் ஆகி இருப்பிர்கள். இது தனிப்பட்டவர் விவகாரம், இதுக்கு முதல் பலநாட்டு தொழிலதிபர்கள் மாட்டப்பட்டு அமெரிக்க ஜெயிலில் இருக்கிறார்கள், இந்திய அரசுக்கும் இந்த வழக்குக்கும் சம்பந்தம் இல்லை, இது இந்திய தனிநபர் பிரச்சனை, என்ன இந்திய அரசு பிரமுகர்களின் பணத்துக்கு சேதாரம், அரசியல் இலாபங்கள் பாதிக்கப்படுவதால் நாடுசார்ந்த பிரச்சனை ஆக்கி ஆதாயம் தேட மக்களின் தலையில் சுமத்த பார்க்கிறாங்க, மன்றத்தில் நீதீ கிடைக்காவிட்டால், பெருமாள் கொடுப்பார் என்று சொல்வது போல, பலநாள் திருடன் ஒருநாள் மாட்டிக்கவேண்டும்.


S.V.Srinivasan
நவ 27, 2024 12:03

இந்த அமெரிக்காகாரனுக்கு பதவியை விட்டு போகும்போது எதுக்கு வேண்டாத வேலை.


ஜெய்ஹிந்த்புரம்
நவ 26, 2024 22:47

இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் எல்ஐசி ஆகிய நிறுவனங்களை சீர்குலைப்பதும் அமெரிக்க சதித் திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் - முறைகேடு ய்வது தெரிந்தும் அதானி குழும நிறுவனங்களின் பங்குகளை அங்க மிரட்டியது பிரதமரின் அலுவலகம் என்பதையும் இங்கு சொல்லியிருக்கலாமே. அதை ஏன் மறைத்தார்கள்.


Senthoora
நவ 28, 2024 06:56

உங்களுக்கு தெரியாமலே வங்கியில் இருக்கும் பணத்தை எடுத்து அதானிக்கு கொடுத்து பணக்காரன் ஆகியது யார். அமெரிக்காவில் குற்றம் நடந்ததால் இப்போ கேட்கிறாங்க, இதுக்கு முன் பூனைக்கு யார் மாணிக்கட்டுவது என்று இருந்தது, இப்போ மணி கட்டியாச்சு.


ஜெய்ஹிந்த்புரம்
நவ 26, 2024 22:38

முறைகேடு நடக்கிறது என்று தெரிந்த பிறகும் எல் ஐ சி, மற்றும் பாரத ஸ்டேட் வங்கி நிறுவனங்களை கையை முறுக்கி மிரட்டி அதானி பங்குகளில் முதலீடு செய்யச் சொன்ன நல்லவன் யாருன்னு சொல்லேன். திருடனோடு கூட்டு சேர்ந்து கொண்டு நாட்டுப்பற்றை போர்வையாக போட்டுகொண்டு அலையும் கொள்ளையர்கள் நீங்கள்.


Venkataraman Karthikeyan
டிச 16, 2024 18:44

கைய முறுக்கினவன் மேல் கேசு போடலாம் அல்லது பாரத் ரோகோ போராட்டம் நடத்தலாம். அதையெல்லாம் வுட்டுப்புட்டு கமெண்ட் வார் எதுக்கு? ஐயாவுக்கு மாத பேமெண்ட்டு கரீட்டா வருதுபோல.


MADHAVAN
நவ 26, 2024 12:17

இனி போராதாகாலம்


Karuthu kirukkan
நவ 26, 2024 10:49

ஜோக்க கீதே அதாம்பா அதானி தமிழ் நாட்டுக்கு வந்து தலிவுரே தனியே உஷார்பண்ணி எதோ பேசிக்கினாரே அப்பாலே எதுவக்கட்டி அன்னதாகிட்டே தலிவர் உஷார்பன்னிச்சப்பா . ஒரே கன்ப்யூஸ் பா


sankaranarayanan
நவ 23, 2024 16:50

பணம் வாங்கிய நான்குபேர்களும் திருட்டுமுழி முழிக்கிறார்கள் தப்பே செய்யாததுபோன்று வாயை மூடிக்கொண்டிருக்கின்றார்கள் ஓர் அறிக்கையயும் இதுவரை அவர்கள் பணம் வாங்கவில்லை என்றே விடவில்லை மவுனம் சம்மதித்திக்கே அடையாவளம் அவரவர் எப்போது எவ்வளவு யார் முலமாக எங்கே வாங்கினார்கள் என்று விரைவில் வெளிவரும் பிறகு பொழைப்பே கந்தலாகிவிடும் இதுதான் அரசியல் நாடகம்