உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / விமான பணிப்பெண்ணுக்கு பலாத்கார மிரட்டல்: பாக்., தொழிலதிபருக்கு 15 மாத சிறை தண்டனை

விமான பணிப்பெண்ணுக்கு பலாத்கார மிரட்டல்: பாக்., தொழிலதிபருக்கு 15 மாத சிறை தண்டனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லண்டன்: லண்டனில் வசிக்கும் பாகிஸ்தானை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு விமான பணிப்பெண்ணை பலாத்காரம் செய்வதாக மிரட்டிய குற்றத்திற்காக 15 மாத சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.பாகிஸ்தானை சேர்ந்தவர் சல்மான் இப்திகார். லண்டனில் வசித்து வருகிறார். இவர் கடந்த 2023ம் ஆண்டு பிப்., லண்டனில் இருந்து பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு குடும்பத்துடன் சென்றார். அப்போது, விமானத்தில் வெறும் கைகளால் ஐஸ் எடுக்க வேண்டாம் என விமான பணிப்பெண் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர், இனவெளி ரீதியில் திட்டியதும், ஆபாசமான வார்த்தைகளால் திட்டி மிரட்டி உள்ளார். மேலும், ஓட்டல் அறைக்கு இழுத்துச் சென்று கூட்டு பலாத்காரம் செய்வேன் எனவும் மிரட்டல் விடுத்துள்ளார். இருக்கையில் சென்று அமரும்படி கூறிய பிறகும் அவர் ஆபாசமான வார்த்தைகளை கொண்டு திட்டினார். இதனை அங்கிருந்த பலர் தங்களது மொபைல்போனில் பதிவு செய்தனர். இதனால், விமானம் துருக்கியில் தரையிறக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கில் அவருக்கு 15 மாத சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.இவர் மது ஏற்கனவே, 204 ல் பொது இடத்தில் தாக்குதல் நடத்தியது, 2008 ல் போதையில் கார் ஓட்டியது என 15 வழக்குகள் உள்ளன.சிறை தண்டனை கேட்டதும் அவர் நீதிமன்றத்திலேயே கண்ணீர் விட்டு அழுதார்.யார் இவர்இவர், ஸ்டாப்பிங் மேட்ச் எனும் நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார். அதனை தோற்றுவித்தவரும் இவரே. இந்த நிறுவனம் மூலம் பல்வேறு துறைகளுக்கு ஆட்கள் தேர்வு செய்து அனுப்பி வைக்கப்படுகின்றனர். இவர் லண்டனில் சொகுசு பங்களாவில் வசித்து வருகிறார். பல ஆடம்பர கார்கள் வைத்துள்ளார்.2021 ல் மது போதை மற்றும் கஞ்சா போதையில் கார் ஓட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் 3 ஆயிரம் ஈரோ அபராதம் கட்டி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ramesh Sargam
ஆக 07, 2025 22:29

பலாத்காரம் செய்வதாக மிரட்டிய குற்றத்திற்காகவே 15 மாத சிறை தண்டனை என்றால், தமிழகத்தில் பலாத்காரம் தினம் தினம் நடக்கிறது. மேலும் வழிபறிப்பு, காவல் நிலைய மர்ம சாவுகள், காவலர்களே கொல்லப்படுவது என்று தமிழகத்தில் தினம் தினம் நடக்கும் குற்றங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால் குற்றம் செய்தவர்கள் ஒருவரும் தண்டிக்கப்படுவதில்லை. தமிழகத்தில் சட்டம் ஒரு இருட்டறை.


Padmasridharan
ஆக 07, 2025 22:07

இந்த முகத்தின் தரிசனம் கிடைக்கவில்லையா சாமி


Padmasridharan
ஆக 07, 2025 21:49

இவர் "மது" ஏற்கனவே, "204 ல்" பொது இடத்தில் தாக்குதல் நடத்தியது.. தங்கள் "மீது" எந்த போதையுள்ளது இப்படி பிழைகள் "2004/2014/2014" தாக்குதல் நடந்துள்ளது அய்யா


சமீபத்திய செய்தி