உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார்? ஓட்டுப்பதிவு துவங்கியது

அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார்? ஓட்டுப்பதிவு துவங்கியது

வாஷிங்டன் அமெரிக்காவின், 47வது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், இந்திய நேரப்படி நேற்று மாலை 4:30 மணிக்கு துவங்கியது. அந்நாட்டு தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு கடும் போட்டி நிலவுவதால், 50 மாகாணங்களிலும் மக்கள் திரளாக வந்து ஆர்வமுடன் ஓட்டளித்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=f7fn84b9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், 78, ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ், 60, போட்டியிடுகின்றனர்.தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளில் இருவரும் மாறி மாறி முன்னிலை வகித்தனர். இதனால், கடும் போட்டி நிலவுகிறது. மொத்த வாக்காளர்கள் 24.4 கோடி. இங்கு முன்கூட்டியே ஓட்டு போடும் வசதி இருப்பதால், 7.5 கோடி பேர் ஏற்கனவே ஓட்டளித்துள்ளனர்.அந்நாட்டு வழக்கப்படி, நவம்பர் மாதத்தின் முதல் திங்கள் கிழமைக்கு மறுநாள் ஓட்டுப்பதிவு நடப்பது வழக்கம். அந்த வகையில், இந்திய நேரப்படி நேற்று மாலை 4:30 மணிக்கும், அமெரிக்க நேரப்படி காலை 6:00 மணிக்கும் ஓட்டுப்பதிவு துவங்கியது.அமெரிக்க மாகாணங்களுக்கு இடையேபல நேர மண்டலங்கள் உள்ளன. இதில், கிழக்கு நேர மண்டலத்தில் உள்ள எட்டு மாகாணங்களில் முதலில் ஓட்டுப்பதிவு துவங்கியது. கனெக்டிகட், நியூ ஜெர்சி, நியூயார்க், நியூ ஹாம்ப்ஷயர், விர்ஜினியா மாகாணங்கள் கிழக்கு நேர மண்டலத்தில் உள்ளன. நியூ ஹாம்ப்ஷயரில் உள்ள டிக்ஸ்வில் நாட்ச் என்ற சிறிய நகரம் ஓட்டுப்பதிவு துவங்கிய முதல் இடமாக அறிவிக்கப்பட்டது.மொத்தமுள்ள 50 மாகாணங்களில், 'ஸ்விங் ஸ்டேட்ஸ்' என்றழைக்கப்படும் அலைபாயும் மாகாணங்களாக ஏழு இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, வடக்கு கரோலினா, பென்சில்வேனியா மற்றும் விஸ்கான்சின் ஆகிய மாகாணங்களில் வெற்றி பெறுபவருக்கே அதிபராகும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.அமெரிக்க நேரப்படி காலை 6:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியதும், மக்கள் ஆர்வமுடன் வந்து ஓட்டளித்தனர். ஓட்டுப்பதிவு முடிந்தவுடன் வன்முறை சம்பவங்கள் நிகழாமல் தடுக்க, முக்கிய அமெரிக்க நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.வெள்ளை மாளிகை மற்றும் அந்நாட்டு பார்லிமென்ட் கட்டடமான கேப்பிடோல் ஹில் ஆகியவை தீவிர பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

வெற்றியை கணித்த நீர்யானை!

தென் கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தின் சி ராச்சா என்ற இடத்தில் உள்ள மிருககாட்சி சாலையில், மூ டெங் என்ற பெயரில் நீர் யானை குட்டி உள்ளது. பிறந்து நான்கு மாதமே ஆன இந்த நீர்யானை குட்டியை வைத்து, அமெரிக்க அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்ற கணிப்பு நேற்று நடத்தப்பட்டது. இதற்காக, கமலா மற்றும் டிரம்ப் பெயர் எழுதப்பட்ட இரண்டு தர்பூசணி பழங்கள் வைக்கப்பட்டன. அவற்றை நெருங்கி வந்த மூ டெங், டிரம்ப் பெயர் எழுதப்பட்ட பழத்தை முழுதுமாக சாப்பிட்டது. டிரம்பின் வெற்றியை அந்த நீர்யானை குட்டி உறுதி செய்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

ஆளுக்கு தலா 3 ஓட்டு

அமெரிக்காவின் கிழக்கு நேர மண்டலத்தில் அமைந்துள்ள நியூ ஹாம்ப்ஷயர் மாகாணத்தின் டிக்ஸ்வில் நாட்ச் என்ற இடத்தில் தான் ஓட்டுப்பதிவு முதலில் துவங்கியது. இங்கு, 100 ஓட்டுகளுக்கு குறைவாக உள்ள கிராமங்களில், நள்ளிரவே ஓட்டுப்பதிவை துவங்க சட்டம் அனுமதிக்கிறது. 100 பேரும் ஓட்டளித்தவுடன் ஓட்டுச்சாவடி மூடப்பட்டு ஓட்டுகள் எண்ணப்படுவது வழக்கம்.அந்த வகையில், ஆறு ஓட்டுகள் மட்டுமே உள்ள சிறிய கிராமத்தில், டிரம்ப் மற்றும் கமலாவுக்கு தலா மூன்று ஓட்டுகள் கிடைத்துள்ளன. கடந்த தேர்தலில், டிக்ஸ்வில் நாட்ச் மக்கள் ஜோ பைடனுக்கு பெருவாரியான ஆதரவு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Srinivasan Venkatraman
நவ 06, 2024 02:56

கமலா ஹாரிஸ் வெல்வதில் இந்தியாவிற்கு லாபம் ஒன்றுமில்லை, அவர் இந்திய வம்சாவழியினராக இருந்தும்கூட, ட்ரம்ப் வென்றால் இந்தியாவிற்கு கெடுதல் ஒன்றும் இல்லை என்றே தெரிந்தவர்கள் கூறுகின்றனர். அமெரிக்கா, இந்தியாவிற்கு, இஸ்ரேலைப் போல் அத்தனை முக்கியத்துவம் கொடுப்பதில்லை, எனவே அவர்கள் ஊரில் யார் வென்றால் நமக்கென்ன?.


M Ramachandran
நவ 05, 2024 19:45

யார் வந்தால் நம்மக்கென்ன. எல்லாம் நமக்கு ஏதிரியாக இங்குள்ள அவன் கை கொடுக்கும் புள்ளைக்களை நமக்கு எதிரா ஏவி விடுவர்.


SUBBU,MADURAI
நவ 05, 2024 17:36

If Trump win, US - India relationship will strengthen as PM Modi - Trump are good friends.


Srinivasan k
நவ 05, 2024 21:58

also republii, Trump are development oriented, will not focus on other nations, influencing wars etc mostly china will be checked if kamala takes over only, good for amrit natiionals US or infia


முக்கிய வீடியோ