உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஒரு லட்சம் டாலர் கட்டணம் யாருக்கு? அமெரிக்க அரசு விளக்கம்

ஒரு லட்சம் டாலர் கட்டணம் யாருக்கு? அமெரிக்க அரசு விளக்கம்

வாஷிங்டன்: ''தற்போது 'எச்1பி' விசா வைத்திருக்கும் யாருக்கும் பாதிப்பு இல்லை. ஒரு லட்சம் டாலர் கட்டணம் என்பது புதிய விசா கோரும் விண்ணப்பங்களுக்கு மட்டுமே பொருந்தும்'' என்று அமெரிக்கா தெளிவுபடுத்தி உள்ளது.அமெரிக்காவில் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் மென்பொருள் உள்ளிட்ட திறன் வாய்ந்த துறைகளுக்கு தேவையானவர்கள் கிடைக்காத நிலையில், 1990களில் அறிமுகம் செய்யப்பட்டது தான், எச்1பி விசா முறை. இதன்படி, இந்தியா, சீனா உட்பட வெளிநாடுகளில் இருந்து திறன் வாய்ந்தவர்கள் வேலைக்கு கிடைத்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=lhbpkx3o&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சாதாரணமாக எச்1பி விசா என்பது முதலில் மூன்று ஆண்டுக்கு வழங்கப்படும். அதன்பின், ஆறு ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படும். அதே நேரத்தில் கிரீன் கார்டு பெற்றவர்கள் வாழ்நாள் முழுவதும் புதுப்பித்துக் கொள்ளலாம்ஜனவரியில் அதிபராக பதவியேற்ற டிரம்ப், சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவரை திருப்பி அனுப்ப முடிவு செய்தார். புதிதாக வருபவர்களையும் குறைக்க விசா நடைமுறைகளை கடுமையாக்கினார். தற்போது 'எச்1பி' விசா திட்டத்தில் புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்தார். புதிய உத்தரவு மூலமாக எச்1பி விசாவுக்கான கட்டணத்தை, 1 லட்சம் டாலராக (ரூ. 88 லட்சம்) உயர்த்தியுள்ளார். தற்போது இந்த கட்டணம் 4 லட்சம் ரூபாய்க்கும் குறைவாகவே உள்ளது. கடந்தாண்டு வழங்கிய எச்1பி விசாக்களில், 71 சதவீதம் இந்தியர்களே பெற்றனர். அடுத்து, சீனர்கள் 11.7 சதவீதம் பெற்றனர். அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ள இந்தியர்களுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதப்பட்டது. இந்த புதிய விதிகள், ''தற்போது 'எச்1பி' விசா வைத்திருக்கும் யாருக்கும் பாதிப்பு இல்லை. ஒரு லட்சம் டாலர் கட்டணம் என்பது புதிய விசா கோரும் விண்ணப்பங்களுக்கு மட்டுமே பொருந்தும்'' என்று அமெரிக்கா தெளிவுபடுத்தி உள்ளது.அதேநேரத்தில், 'எச்1பி' விசாவுக்கு ஆண்டுதோறும் ஒரு லட்சம் டாலர் கட்டணம் செலுத்த வேண்டும் என்று நேற்று அமெரிக்க அமைச்சர் ஒருவர் கூறியிருந்தார். அதை மறுத்துள்ள வெள்ளை மாளிகை, இது ஒரு முறை மட்டுமே செலுத்தும் கட்டணம் என்று தெரிவித்துள்ளது.ஏற்கனவே விசா வைத்திருப்பவர்கள் எப்போதும் போல வெளிநாடுகளுக்கு சென்று விட்டு மீண்டும் அமெரிக்காவுக்கு திரும்ப வர முடியும். நேற்று வெளியிடப்பட்ட உத்தரவால் தற்போது வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்.

பழசுக்கு கிடையாது; புதுசுக்கு தான்!

இது குறித்து வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது: * 'எச்1பி' விசாவுக்கு ஒரு லட்சம் டாலர் கட்டணத்தை வருடம் வருடம் கட்ட தேவையில்லை. இது புதிதாக அப்ளே செய்து வாங்கும் போது மட்டும் ஒரு முறை செலுத்தினால் போதும். * ஏற்கனவே 'எச்1பி' விசா வைத்து இருப்பவர்கள் தற்போது வெளிநாட்டில் இருந்தால் மீண்டும் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு ஒரு லட்சம் டாலர் கட்டணம் வசூலிக்கப்படாது. * 'எச்1பி' விசா வைத்திருப்பவர்கள் வழக்கம் போல் நாட்டை விட்டு வெளியேறி மீண்டும் நுழையலாம். அதற்கு நேற்றைய அறிவிப்பு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. * இந்த ஒரு லட்சம் டாலர் கட்டணம் புதிய விசாக்களுக்கு மட்டுமே பொருந்தும், புதுப்பித்தலுக்கும், தற்போது விசா வை த்திரப்பவர்களுக்கும் கிடையாது. * இது ஒரு முறை மட்டுமே செலுத்தும் கட்டணம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

V Venkatachalam
செப் 21, 2025 14:03

விரைவில் இந்தியா இதேமாதிரி 1 லட்சம் கட்டணம் விதிக்கும் நிலமை உருவாகும். ஏற்கனவே இந்தியா அதை நோக்கி போய்க்கொண்டு இருக்கிறது. பெரியண்ணன் விரைவில் சின்னண்ணன் ஆகி விடுவார்.


MARUTHU PANDIAR
செப் 21, 2025 13:55

நம்மூர்ல இப்படி பலவிதமா சொல்லுவாங்க. ஒண்ணு அமெரிக்காவில் ஒண்ணு டில்லியில்......குரங்கு கையில் கெடச்ச பூமாலைன்னும் சொல்வாங்க.


Hari
செப் 21, 2025 15:16

உங்கள் ஊரில்?


Kalyan Singapore
செப் 21, 2025 13:41

நான் கேள்விப்பட்ட ஒரு தகவல் வருடம் 2014 என்று நினைக்கிறேன் .Info நிறுவனர் நாராயண மூர்த்தி அமெரிக்காவில் computer துறையில் பல பல சாதனைகள் புரிந்த விஷால் சிக்கா சிக்கா என்றால் நாணயம் என்று பொருள் என்பவரை Info CEO ஆக நியமித்தார். அவர் நாராயண மூர்த்தி ஆசைப்பட்டது போல் economy வகுப்பில் அலுவலக பயணம் செய்யவில்லை. ஒரு அமெரிக்கா நிறுவனத்தை வாங்க முயற்சித்து ஒப்பந்தம் கையெழுத்தாகும் தருவாயில் நாராயண மூர்த்தி அடங்கிய இன்போசிஸின் மேலாளர் குழுவுக்கு ஒப்புதலுக்காக சமர்ப்பித்தார். நாராயண மூர்த்திக்கு வந்ததே கோபம். மிக குறைந்த riskல் ஆட்களை அமெரிக்கா அனுப்பி அதிக லாபம் தரும் வேலையை மட்டும் செய்யாமல் எதற்காக அமெரிக்கா கம்பனியை வாங்கி அதுவரை வந்து கொண்டிருந்த லாபத்தை குறைக்க வேண்டும்? 2017 உடனே விஷால் சிக்கா வை ராஜினாமா செய்யச்சொல்லி விட்டார். விஷால் சிக்கா மறுபடியும் அமெரிக்கா சென்று தனது ஆராய்ச்சிகளை தொடர்ந்தார். 2016 ல் சிக்கா வாங்க முயன்று கி இன்போசிஸ் நாராயண் மூர்த்தி நிராகரித்த நிறுவனம் தான் ChatGPT. அன்று அதை இன்போசிஸ் வாங்கியிருந்தால் உலகில் AI தொழில் நுட்பத்துக்கு இந்தியா முன்னோடியாக திகழ்ந்து இந்தியாவுக்கு விசா வாங்க அமெரிக்கா கெஞ்சும் நிலை ஏற்பட்டிருக்கும் . இந்த H1B visa வை வைத்து அமெரிக்கா விளையாட முடியாது. என்ன செய்ய நம் தொழிலதிபர்களுக்கு குறுகிய கால லாபத்தில் மட்டுமே குறி. நீண்ட கால வளர்ச்சி அவர்கள் அட்டவணையில் இல்லை .


திகழ்ஓவியன்
செப் 21, 2025 13:37

அவர் அன்று கம்ப்யூட்டர் கொண்டுவந்த போது எதிர்த்த பிஜேபி இன்று டிஜிட்டல் வேர்ல்ட் என்று பெருமை பேசி கொள்கிறது


visu
செப் 21, 2025 15:37

எதாயாவது உளற வேண்டியது பிஜேபி என்று கம்ப்யூட்டர் வேண்டாம் என்று சொன்னது


என்றும் இந்தியன்
செப் 21, 2025 17:53

1 உளறுக உளறுக உளறிக்கொண்டே இருக்க, அஃதிலார் ரூ 200 உபிஸ் அலர்க.


Vasan
செப் 21, 2025 11:41

2005 ஆம் வருடத்தில் அமெரிக்க அரசாங்கமானது நம் பாரத பிரதமர் திரு மோடி ஜி அவர்களுக்கே விசா வழங்க மறுத்தது. திரு மோடி ஜி அவர்கள் அப்பொழுது குஜராத்தின் முதலமைச்சராக இருந்தார். அப்பொழுது குஜராத்தில் நடந்த இனக்கலவரங்களுக்கு அவரே காரணம் என்று இந்திய தேசிய மனித உரிமை ஆணையத்தின் குற்றச்சாட்டின் அடிப்படையில் அமெரிக்கா அரசாங்கம் அவருக்கு விசா வழங்க மறுத்தது. பின்னர் நடந்தது சரித்திரம். திரு மோடி ஜி அவர்கள் உலகளாவிய தலைவராக போற்றப்படுகிறார். இருபது வருடங்களுக்கு பின் மீண்டும் அமெரிக்கா இந்தியர்களை சீண்டி பார்க்கிறது. இது வெகு விரைவில் முறியடிக்கப்படும். அமெரிக்கா தன் தவறை உணர்ந்துகொள்ளும்.


ponssasi
செப் 21, 2025 11:38

இன்று ராஜீவ் என்ன செய்தார் என கேட்கலாம், அந்த காலகட்டத்தில் அவர் அறிவியல் சார்ந்து சிந்தித்தது இந்தியாவுக்கு புதிது. +2 முடித்தால் அடுத்து என்ன BA, BSC, பிகாம் DIPLAMO போன்றவைதான். அதுவும் அரசு கல்லூரிகள் தான், போக்குவரத்து வசதிகள் மெல்ல மெல்ல வளர்ந்து வந்ததும் அப்போதுதான். அதை வைத்துதான் அவர் வளர்ச்சியை நோக்கி பயணித்தார். தொலைத்தொடர்பு துறைக்கு முன்னுரிமை தந்தார் இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம். இன்றைய வளர்ச்சிக்கு அடித்தளமிட்டது அவர்தான். இன்று நாம் காரில் பயணிக்கும்போது எங்க அப்பா சைக்கிள்தான் ஓட்டினார் என்று சொல்வோம் தெரியுமா நாம் காரில் பயணிப்பது அவர் சைக்கிள் ஒட்டியதால்தான் என்பது தெரியாமல் அதுபோலத்தான் இதுவும்


அருண் பிரகாஷ் மதுரை
செப் 21, 2025 10:38

இந்தியர்களின் வருகையைக் குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தால் அது அமெரிக்கா நாட்டிற்கே நஷ்டமாக முடியும்.. அமெரிக்காவில் திறமை வாய்ந்த ஐடி ஊழியர்கள் வேலை இல்லாமல் இருந்தால் அவர்களுக்கு வேலை கொடுக்கலாம். ஆனால் அமெரிக்காவில் திறமையானவர்களும் இல்லை, இருந்தாலும் இந்தியர்கள் போல குறைந்த சம்பளத்தில் அந்த வேலையை செய்யவும் மாட்டார்கள். விசா கட்டணத்தை உயர்த்தியதால் அரசு வருவாய் உயரும் என்று கணக்குப் போட்டால் இவ்வளவு கட்டணம் செலுத்துவதற்கு பதிலாக நிறுவனங்கள் அமெரிக்காவை விட்டு வெளியேறி வேறு நாடுகளுக்கு இடம் பெயரும். இதுதான் நடக்கும்.. இந்தியாவின் வளர்ச்சியை பொறுக்காத டிரம்ப் அவர்கள் ஆடும் ஆட்டம் வெகு சீக்கிரம் முடிவுக்கு வரும். இந்தியா வளர்ச்சியை நோக்கி வீறு நடை போடும். அமெரிக்காவின் ஒவ்வொரு நடவடிக்கையும் தங்களுடைய பொருளாதாரத்தை உயர்த்த ஏற்படுத்தப்பட்ட நடவடிக்கை எனில் இதை இந்தியா முன்பே திட்டமிட்டு நடத்தி விட்டது. அதுதான் மேக் இன் இந்தியா திட்டம். புரியாதவர்கள் எப்போதும் போல போகிற போக்கில் மோடியை விமர்சனம் செய்து விட்டு போங்கள்.. வேறு என்ன செய்ய முடியும் உங்களால்..


நிக்கோல்தாம்சன்
செப் 21, 2025 09:54

சிரிப்பு தான் வருகிறது முதலாளிகளின் நாட்டை பார்க்கையில்


ஆரூர் ரங்
செப் 21, 2025 09:22

ராஜிவ்தான் இந்தியாவுக்கு கால்குலேட்டர் கணினி கொண்டு வந்தது என்று பெருமை அடித்துக் கொள்ளும் காங் இங்கு எத்தனை கூகிள், மெட்டா, அலிபாபா, அமேசான், மைக்ராசாஃப்ட் போன்ற நிறுவனங்களை உருவாக்கியது? அவர்களுக்கு அடிமை வேலை செய்யவே இலட்சக்கணக்கான பி டெக் ஆட்களை உருவாக்கினார். கடந்த 10 ஆண்டுகளாகத்தான் இங்கு ஆயிரக்கணக்கான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாகியுள்ளன. யாராவது பெரிய நிறுவனத்தை உருவாக்கினால் உடனே கார்பரேட் ஒழிக முழக்கத்தை எழுப்பி கெடுத்ததுதான் INDI நக்சல் சாதனை. இன்னும் எத்தனை காலம் அன்னிய விசா அடிமைகளாக கைகட்டி நிற்க வேண்டும்? நாமும் அன்னிய நிறுவனங்களுக்கு ஈடுகொடுக்கும் ஏற்படுத்தும் சுதேசி MNC களை உருவாக்க வேண்டும். நம்மால் முடியும்.


அழகு / ALAGU
செப் 21, 2025 09:55

சரியாக சொன்னீர்கள் நண்பரே!


திகழ்ஓவியன்
செப் 21, 2025 13:32

விவரம் தெரிந்தால் பேசுங்கள் ,நுனி புள் மேயாதீர்


Sudha
செப் 21, 2025 09:06

கோமாளிகள் நாடு


சமீபத்திய செய்தி