உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வீடு தீப்பிடித்தால் யாரை முதலில் காப்பாற்ற வேண்டும்: வடகொரியாவில் வினோத கட்டுப்பாடு

வீடு தீப்பிடித்தால் யாரை முதலில் காப்பாற்ற வேண்டும்: வடகொரியாவில் வினோத கட்டுப்பாடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பியாங்யாங்:உங்கள் வீடு தீப்பிடித்தால், முதலில் கிம் ஜாங் உன்னின் புகைப்படத்தை நீங்கள் காப்பாற்ற வேண்டும் என்ற வினோத சட்டம் வடகொரியாவில் உள்ளது.வடகொரியா விசித்திரங்கள் நிறைந்த நாடு. இங்கு அதிபராக கிம் ஜாங் உன் உள்ளார். குடும்ப சர்வாதிகாரம் மற்றும் குடிமக்கள் பின்பற்ற வேண்டிய அசாதாரண விதிகளுக்கு பெயர் பெற்றது. அங்குள்ள வினோத கட்டுப்பாடுகள் குறித்து இன்ஸ்டாகிராம் வீடியோ வைரலாக பரவி வருகிறது.அந்த வீடியோவில்,வட கொரிய பெண் ஒருவர் பாட்காஸ்டில் பதட்டமாகப் பேசுவதைக் காட்டுகிறது. வர்ணனையாளர் ஜோ ரோகன், என்பவர் வட கொரியாவிலிருந்து தப்பியோடிய ஒரு பெண்ணுடன் உரையாடுகிறார். அதில், வடகொரியாவில் குடியிருக்கும் ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்னின் புகைப்படம் இருக்க வேண்டும் என்றும், அதை எப்போதும் கறைபடாமல் வைத்திருக்க வேண்டும் என்றும் அந்தப் பெண் விளக்குகிறார். தூசி இருக்கிறதா என்று சோதிக்க ஆய்வாளர்கள் பெரும்பாலும் இரவு முழுவதும் வீடுகளுக்குள் நுழைகிறார்கள்.புகைப்படத்தில் ஏதேனும் தூசி காணப்பட்டால், அது விசுவாசமின்மையின் அடையாளமாகக் கருதப்படும்.மேலும் அந்த வீட்டில் உள்ளவர்களை கைது செய்யலாம்.தண்டனை மரண தண்டனையாகவோ அல்லது குடும்பத்தின் மூன்று தலைமுறையினருக்கு சிறைத்தண்டனையாகவோ இருக்கலாம். ஒரு வீடு தீப்பிடித்தால், கிம் ஜாங்-உன்னின் படத்தைக் காப்பாற்றுவது ஒருவரின் சொந்த உயிரைக் காப்பாற்றுவதை விட முன்னுரிமை பெறுகிறது.விரைவாக வைரலான இந்தப் பேட்டி, வட கொரியர்கள் எதிர்கொள்ளும் கற்பனை செய்ய முடியாத கஷ்டங்களை வெளிச்சம் போட்டுக் காட்டியது, மேலும் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

SATHIK BASHA
ஜன 27, 2025 12:23

உலகில் எங்கு எது நடந்தாலும் திமுக வை பிடிச்சு தொங்குறது


Laddoo
ஜன 13, 2025 04:25

வடகொரியாவிலும் ஒரு சொரியார் படமா? "எனக்கு புத்திசாலிங்க தேவையில்லை, முட்டாள்கள்தான் தேவை" - சொரியார். அப்ப சொரியாரை பின்பற்றி வடகொரியாவில் ஆட்சி நடக்குது


நிக்கோல்தாம்சன்
ஜன 12, 2025 03:59

இது ஏற்கனவே தமிழ்நாட்டில் நடைமுறையில் இருக்கே , ஒருவர் செருப்பால் சுவற்றில் உள்ள பேப்பரை அடிக்கிறார் , அதனை ஒருவர படம் பிடிக்கிறார் , அந்த பேப்பரை செருப்பால் அடித்ததை படம்பிடித்ததால் அவருக்கு கைது வாரண்டும் , அந்த செருப்புக்கு தண்டனையும் , அந்த ஒருவரை தேடி காவல்படையும் , இது இத்தனையும் நடக்கையில் நாய் ஒன்று அந்த பேப்பர் மீது சூ சூ பண்ணியதால் அந்த பேப்பர் தன்னைத்தானே கிழித்துக்கொண்டு தொங்கியதும் வரலாறு , இது தெரியாமல் வடகொரியா சர்வாதிகாரியை பற்றி செய்தி போட்டு டைம் வேஸ்ட் பண்றீங்க யுவர் ஹானர்


BalaG
ஜன 12, 2025 01:19

அவன் உலக மகா லூசாக இருப்பான் போல


Ramesh Sargam
ஜன 11, 2025 22:15

இந்த நிலைமை கூடிய சீக்கிரம் தமிழகத்தில்கூட வரலாம். ஆகையால் தமிழகத்தில் ஒவ்வொருவர் வீட்டிலும், முதல்வர் படம்,உதயநிதி படம், கருணாநிதி படம், பெரியார் படம் வாங்கி மாட்டவும். மேலும் சேகர் பாபு தலைமையில் பூஜை செய்யவும்.


..
ஜன 12, 2025 11:27

வாய்ப்பு உள்ளது


..
ஜன 12, 2025 11:28

...நீங்கள் சொல்லவில்லை


Anantharaman Srinivasan
ஜன 11, 2025 22:09

படா.. தாமஷாயிருக்கே. உயிர் முக்கியமா படம் முக்கியமா? இங்கு அப்படியொரு நிலைமை வந்தால் இரண்டு படங்களை காப்பாற்ற வேண்டியிருக்கும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 11, 2025 21:51

பெரும்பாலும் சர்வாதிகாரிகளுக்கு மரணம் இயற்கையாக அமைவதில்லை .... பொதுவாகச் சொன்னேன் ....


நிக்கோல்தாம்சன்
ஜன 14, 2025 07:01

ஆனால் அப்போதும் டப்பிங் வாய்ஸ் கொடுத்து அதனையும் வொட்டாக மாற்ற அவரது வாரிசு முயலுவார் என்பதனையும் மறந்து விட்டீர்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை