உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஹார்வர்டு பல்கலையில் வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை; அதிபர் டிரம்ப் உத்தரவு

ஹார்வர்டு பல்கலையில் வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை; அதிபர் டிரம்ப் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: வெளிநாட்டு மாணவர்களை ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் சேர்ப்பதற்கு அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகம் தடை விதித்து உள்ளது.அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் மாகாணத்தில் ஹார்வர்டு பல்கலை உள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்பின் நிர்வாகம் இந்த பல்கலையில் உள்ள சமத்துவம் மற்றும் பன்முக திட்டங்களை நிறுத்தும்படியும், பேராசிரியர்களுக்கான அதிகாரத்தை குறைக்கவும் வழிகாட்டுதல்களை பிறப்பித்தது. இதை ஏற்க மறுத்ததால், ஹார்வர்டு பல்கலைக்கு வழங்கப்பட்டு வந்த, 18,500 கோடி ரூபாய் நிதியுதவியை டிரம்ப் நிறுத்தினார். இது தொடர்பாக, டிரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக ஹார்வர்டு பல்கலைக்கழகம் வழக்கு தொடர்ந்து இருந்தது. இதனால் கோபம் அடைந்த டிரம்ப், ஹார்வர்டு பல்கலைக்கு வழங்கப்பட்ட வரி விலக்கு சலுகையை ரத்து செய்தார். தற்போது, வெளிநாட்டு மாணவர்களை பல்கலைக்கழகத்தில் சேர்ப்பதற்கு அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகம் தடை விதித்து உள்ளது. இது குறித்து உள்நாட்டு பாதுகாப்பு செயலாளர் கிறிஸ்டி கூறியதாவது: வன்முறை, யூத எதிர்ப்பு ஆகியவற்றை வளர்க்க துணை போவதால் ஹார்வர்டு பல்கலை மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வெளிநாட்டு மாணவர்களைச் சேர்த்து, அவர்களின் கல்விக் கட்டணத்திலிருந்து பயனடைவது பல்கலைக்கழகங்களுக்கு ஒரு சலுகை, உரிமை அல்ல. சரியானதைச் செய்ய ஹார்வர்டுக்கு ஏராளமான வாய்ப்புகள் இருந்தன. அது மறுத்துவிட்டது. சட்டத்தை கடைப்பிடிக்கத் தவறியதன் விளைவாக வெளிநாட்டு மாணவர்களை பல்கலைக்கழகத்தில் சேர்ப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் இது ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

என்றும் இந்தியன்
மே 23, 2025 17:11

பார்த்தீர்களா டிரம்ப் ன் அமெரிக்க விசுவாசத்தை குடும்பம் ஜெர்மனி அங்கிருந்து புலம் பெயர்ந்த குடும்பம் இது


Balamurugan
மே 23, 2025 13:59

இந்த நடவடிக்கை தற்போது இந்தியாவுக்கு மிக மிக அவசியம்.


Narayanan
மே 23, 2025 12:48

டிரம்புக்கு ஏதோ ஆகிவிட்டது . அமெரிக்காவின் புகழுக்கு களங்கம் விளைந்துகொண்டே இருக்கிறது .


Ganapathy
மே 23, 2025 11:41

Similar action to be taken on liberal institutions of bharath. Asoka, JNU, Jamila Milia, Chennai IIT are few to mention here.


morlot
மே 23, 2025 13:36

Why chen̈nai IIT?


Ganapathy
மே 23, 2025 14:03

Watch the convocation ceremonies of JIT chennai. All are giving Hamas supporting speech.


Ganapathy
மே 23, 2025 11:39

மிகச்சிறந்த நடவடிக்கை. இங்கும் இது தேவை.


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
மே 23, 2025 11:18

அமெரிக்காவில் காங்கிரஸ் மற்றும் திமுக கிளை ஆரம்பித்தால் தான் டிரம்ப் அடங்குவார் போலிருக்கு....காங்கிரஸ்ஸும் திமுகவும் முயற்சிக்கலாம்.....!!!


Ramesh Sargam
மே 23, 2025 10:52

இந்த கொசுத்தொல்லை ரொம்பவே தாங்கவேமுடியவில்லையே .....


Balasubramanian
மே 23, 2025 10:45

இவருக்கு தனிப்பட்ட முறையில் கடார் அரசால் கொடுக்க பட்ட விமானத்தை அமெரிக்கா கொண்டு செல்ல உங்கள் உச்ச நீதிமன்றத்தில் தடை வாங்குங்கள்! - எப்படி என்று தெரிய அணுகவும் எங்கள் ஊர் கபில் சிபல்! எல்லா கேசுக்கும் தடை வாங்குவதில் நிபுணர்!!


Anbuselvan
மே 23, 2025 10:42

இதே போல வெளிநாட்டிலிருந்து பல்கலைக்கழகத்திற்கு பேச வரும் அரசியல் பிரமுகர்களுக்கும் தடை விதித்தால் நன்றாக இருக்கும்


Columbus
மே 23, 2025 10:39

Can we do the same to JNU.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை