உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பிணைக்கைதிகளை விடுவிக்காவிட்டால் காசா நகரை அழிப்போம்: இஸ்ரேல் அமைச்சர்

பிணைக்கைதிகளை விடுவிக்காவிட்டால் காசா நகரை அழிப்போம்: இஸ்ரேல் அமைச்சர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காசா: ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களை போட்டுவிட்டு பிணைக்கைதிகளை விடுவிக்காவிட்டால் காசா நகரையே அழித்துவிடுவோம் என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.மேற்கு ஆசிய நாடான இஸ்ரேல் மீது 2023 அக்டோபர் 07-ம் தேதி ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர். 251 க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதற்கு பதிலடியாக பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் போரை துவக்கியது.இதில் 62 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். தற்போது வரை 75 சதவீத காசா பகுதிகள் இஸ்ரேல் ராணுவத்தின் கட்டுப்பட்டில் உள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன் காசாவை முழுமையாக கைப்பற்றும் திட்டத்துக்கு இஸ்ரேல் ராணுவ அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.இந்த போர் காரணமாக காசாவில் முதல்முறையாக பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக ஐநா ஆதரவு பெற்ற உணவு பாதுகாப்பு அமைப்பு(The Integrated Food Security Phase Classification (IPC) ) ஒன்று தகவல் தெரிவித்துள்ளது. காசா மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பஞ்சம் நிலவி வருவதாகவும், அங்கு நிலைமை மோசமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. டெயின் அல் பலா மற்றும் கான் யூனிஸ் நகரிலும் வரும் செப்டம்பர் மாதத்துக்குள் பஞ்சம் ஏற்படலாம் எனவும் தெரிவித்துள்ளது. காசாவில் மட்டும் 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வறுமை, பட்டினி மற்றும் மரணம் என்ற அபாய நிலையில் உள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

கொள்ளை

இதனிடையே காசா நகரில் வசிக்கும் காடா அல் கவுர்ட் என்ற பத்திரிகையாளர் கூறியதாவது: உணவு, குடிநீர் மற்றும் அ த்தியாவசிய மருந்துகள் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சில லாரிகளில் நிவாரண பொருட்கள் வருகின்றன. ஆனால், அவை கொள்ளையடிக்கப்படுவதால் ஏழை மக்கள் மற்றும் தேவைப்படுவோருக்கு கிடைப்பது இல்லை. போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தினால் மக்கள் இங்கு வெளியேறுவது சிக்கலாக உள்ளது. அவர்களுக்கு தேவையான பணமும் இல்லாத நிலையில் உள்ளனர். எப்போது பார்த்தாலும் குண்டு வெடிக்கும் சத்தம், துப்பாக்கி சத்தம் கேட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

ஊட்டச்சத்து குறைபாடு

காசா நகரில் வசிக்கும் குழந்தைகள் மத்தியில் ஊட்டச்சத்து குறைபாடு காணப்படுவதாக தொண்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. 5 ல் ஒரு குழந்தை ஊட்டச்சத்து குறைபாடால் அவதிப்பட்டு வருகின்றனர். கர்ப்பணிகள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கும் தேவையான ஊட்டச்சத்து உணவு கிடைக்கவில்லை என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

மிரட்டல்

இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் கூறியதாவது: இஸ்ரேலின் நிபந்தனைப்படி ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு, பிணைக்கைதிகளை விடுவிக்காவிட்டால், அவர்களுக்கு நரகத்தின் வாசல் திறக்கப்படும். அவர்கள் ஒப்புக் கொள்ளாவிட்டால் ஹமாஸ் அமைப்பினரின் தலைநகரான காசாவை ரபா மற்றும் பெயின் ஹனூன் போல் மாற்றுவோம் என தெரிவித்தார். இந்த இரு நகரங்களும் இஸ்ரேல் தாக்குதலில் இடிபாடுகள் குவிந்த நகரமாக காணப்படுவது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஆக 23, 2025 08:40

உலக நாடுகளில் எந்த நாடாவது ஹமாஸுக்கு கண்டனம் தெரிவித்து புத்தி சொல்கிறதா பாருங்கள்.....இதை அன்றே செய்திருந்தால் இத்தனை உயிர்பலி நேர்ந்திருக்காது..... ஹமாஸ் தன் மக்கள் இறந்தாலும் பரவாயில்லை என்று முஸ்லிம் நாடுகள் கொடுக்கும் ஊக்கமும், பணமும் ஆயுதங்களும் கொண்டு இன்றுவரை இஸ்ரேலிடம் மோதிக்கொண்டு இருக்கிறது...விளைவு காசா மொத்தமும் இஸ்ரேல் வசமாக போகிறது அது மட்டும் இல்லை ஹமாஸ் தொடர்ந்து மோதினால் எந்த நாட்டிற்காக போரிடுகிறதோ அந்த நாட்டையும் இஸ்ரேல் தன் வசப்படுத்தும்.....இங்கு ஹமாஸ் அடங்கி போய் ஆயுதங்களை ஒப்படைத்து பிணைக்கைதிகளை விடுவித்து தம் மக்களை காத்து கொள்வதை தவிர வேறு வழி இருப்பதாக தெரியவில்லை.....!!!


தாமரை மலர்கிறது
ஆக 22, 2025 23:37

வயிறு நிரம்பினால், உடனடியாக துப்பாக்கியை தூக்கிவிடுவார்கள். அதனால் பாதுகாப்பிற்காக தான் இஸ்ரேல் இவர்களை பட்டினியோடு வைத்திருக்கிறது. பசி இருக்கும்வரை அமைதியாக இருப்பார்கள். மத வெறியிலிருந்து தெளியும்வரை, பசியோடு வைத்திருப்பது அவசியம்.


ManiMurugan Murugan
ஆக 22, 2025 23:10

உலக மே தனக்கு அடிமை என்பது போல் வசனம் பேசும் அமெரிக்க போர் நிறுத்தும் அதிபர் இஸ்ரேல் ஹமாஸ் இடையே ஏன் வரவில்லை


Nagarajan D
ஆக 22, 2025 22:30

காசா அழிந்தால் தான் இந்த இஸ்லாமிய பயங்கரவாதிகளின் அழிவு ஆரம்பம் ஆகும்... நல்ல வேளை அங்கே இஸ்ரேலில் நம்ம கிறுக்கு பப்பு காந்தியை போல எவரும் இல்லை இருந்திருந்தால் பாலஸ்தீனத்திற்கு வக்காலத்து வாங்கியிருப்பார் திருட்டு காந்தி


Sivakumar
ஆக 22, 2025 23:38

யாரும் திருட்டு காந்தி இல்லை. பெரோஸ் காந்தியின் பேரனின் பெயர் என்னவாக இருக்கணுமோ அப்படித்தானே இருக்கிறது ? உங்களுக்கு பொறாமையா இருக்குதா அன்பரே ? உங்களுக்கு வேண்டுமானால் சாவர்க்கர் பெயரை வைத்துக்கொள்ளலாமே. யாரும் தடுக்கமாட்டார்கள்


Natarajan Ramanathan
ஆக 22, 2025 22:00

ஏராளமான நிவாரண பொருட்கள் வருகின்றன. ஆனால், அவை கொள்ளையடிக்கப்படுவதால் ஏழை மக்கள் மற்றும் தேவைப்படுவோருக்கு கிடைப்பது இல்லை.


essemm
ஆக 22, 2025 21:14

ஒட்டுமொத்த உலகமும் இந்த தீவிரவாத கும்பலை ஒழித்துக்காட்ட காத்திருக்கிறது. ஒழித்துக்கட்டுங்கள் அண்ணா


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஆக 22, 2025 20:51

அடுத்து காசா நகரின் முக்கிய லாண்ட்மார்க் கட்டிடங்கள் தூசிமண்டலங்களாக மாறும். அது பிணைக்கைதிகளின் துயரங்களுக்கு முடிவாகவும், ஹமாஸ் ஆட்சியின் முடிவின் ஆரம்பத்தின் அடையாளமாக இருக்கும். நம் எல்லோரும் அந்த வீடியோ விரைவில் பார்ப்போம்.


Tamilan
ஆக 22, 2025 20:08

இதில் இந்தியாவின் பங்கு என்ன


Jack
ஆக 22, 2025 20:44

நீங்க அங்கே செல்ல வேண்டியது தானே ?


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஆக 22, 2025 20:56

சூடானில் நடக்கும் போரில் இந்தியாவின் பங்கு என்னவோ அதே பங்குதான். மத்தியகிழக்கு நாடுகளில் எதற்காக அடித்துக்கொள்கிறார்கள் என்றே தெரியாது. அவர்களின் பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பதே இந்தியாவிற்கு நல்லது. காட்டில் இரண்டு எலிகள் சண்டை போட்டுக்கொண்டால் சிங்கத்தால் அந்த சண்டையை வேடிக்கை பார்ப்பதைத்தவிர வேறு என்ன செய்ய முடியும்?


SUBBU,MADURAI
ஆக 22, 2025 21:45

இஸ்ரேலுடன் சேர்ந்து கொண்டு ஹமாஸ் தீவிரவாதிகளை சாகடிப்பதுதான் இந்தியாவின் பங்கு. அது முடிந்ததும் இங்கு வந்து மூர்க்க துரோகிகளை சுளுக்கு எடுப்பதுதான் இந்தியாவின் அடுத்த இலக்கு...


Natarajan Ramanathan
ஆக 22, 2025 22:03

கைதட்டி ரசிப்பதுதான். வேறு என்ன?


Pandi Muni
ஆக 22, 2025 20:02

காசா மட்டுமல்ல மூர்க்க கும்பலை வேரோடு அழிக்க வேண்டும்.


முக்கிய வீடியோ