மீண்டும் தங்கம் வெல்வாரா தங்க மகன் நீரஜ் சோப்ரா: இன்று பைனல்
பாரிஸ்: ஒலிம்பிக் தடகளத்தில் இன்று, ஈட்டி எறிதல் போட்டி பைனல் நடக்கிறது. இந்தியா சார்பில் டோக்கியோ ஒலிம்பிக்கில் சாதித்த, 'தங்க மகன்' நீரஜ் சோப்ரா பங்கேற்கிறார்.'முதல்' நம்பிக்கை:
தகுதிச்சுற்றில் 'பி' பிரிவில் களமிறங்கிய நீரஜ் சோப்ரா(26), முதல் வாய்ப்பில் 89.34 மீ., தூரம் எறிந்து, பைனலுக்கு முன்னேறினார். இந்த சீசனில் இவர் எறிந்த சிறந்த தூரமாக இது அமைந்தது. இதையடுத்து அடுத்த இரு வாய்ப்பில் பங்கேற்காத நீரஜ் சோப்ரா, உடனடியாக ஒலிம்பிக் கிராமம் சென்று, பைனலுக்கான பயிற்சியை துவக்கினார்.நீரஜ் சோப்ரா மீது நம்பிக்கை காணப்படுகிறது. இன்று மீண்டும் தங்கம் வென்றால், எரிக் லெம்மிங் (சுவீடன், 1908-24) ஜான்னி மைரா (பின்லாந்து, 1920-24), ஜான் ஜெலெஸ்னி (செக் குடியரசு, 1992-96, 2000), ஆன்ட்ரியாஸ் (நார்வே, 2008) ஆகியோருக்கு பின், தங்கப்பதக்கத்தை தக்க வைக்கும் 5வது வீரர் என்ற சாதனையை படைக்கலாம். இப்போட்டி, இந்திய நேரப்படி, இன்று இரவு 11.55 மணிக்கு துவங்குகிறது.