உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உக்ரைன் மீதான ரஷ்யா தாக்குதல் முடிவுக்கு வருமா: அமெரிக்காவின் திட்டத்துக்கு ஜெலன்ஸ்கி ஒப்புதல்

உக்ரைன் மீதான ரஷ்யா தாக்குதல் முடிவுக்கு வருமா: அமெரிக்காவின் திட்டத்துக்கு ஜெலன்ஸ்கி ஒப்புதல்

கீவ் : ரஷ்யாவின் தாக்குதலை நிறுத்த அமெரிக்கா முயற்சித்து வரும் நிலையில், அந்நாடு தயாரித்த 20 அம்ச திட்டம் கொண்ட அமைதி ஒப்பந்தத்தில் பெரும்பாலானவற்றை உக்ரைன் ஏற்றுக் கொண்டுள்ளது.கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி முதல் உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனை நிறுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. அமெரிக்காவில் அதிபராக டிரம்ப் பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தினார். இதற்காக தயாரிக்கப்பட்ட அமைதி ஒப்பந்தத்தை ஏற்பதில் உக்ரைன் தயக்கம் காட்டியது. இதனால் அமைதி ஏற்படவில்லை.இந்நிலையில், இந்த தாக்குதலை நிறுத்துவதற்கு அமெரிக்கா தொடர்ந்து முயற்சி செய்து வந்தது. இதனடிப்படையில் போர் நிறுத்தம் தொடர்பான 20 அம்சத்திட்டம் தயாரிக்கப்பட்டது. இதில் பெரும்பாலான திட்டங்களுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஒப்புதல் அளித்துள்ளார். சில பிராந்திய பிரச்னைகள் மட்டுமே நிலுவையில் உள்ளன. அமெரிக்கா மற்றும் உக்ரைன் ஏற்றுக் கொண்ட நிலையில், அந்த ஒப்பந்தம் ரஷ்யாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.ஆனால், அந்த ஒப்பந்தத்தில் என்ன உள்ளது என்பது குறித்த தகவலை ஜெலன்ஸ்கி வெளியிடவில்லை.அதேநேரத்தில், போருக்கு பிந்தைய கட்டுமானப்பணிகள், மற்றும் பாதுகாப்பு உறுதிமொழிகள் குறித்து உக்ரைன் மற்றும் அமெரிக்கா இடையே தனியாக இருதரப்பு ஒப்பந்தம் போடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், இந்த போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க தயாரித்துள்ள 20 அம்ச திட்டம் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அதில் கூறப்பட்டுள்ளதாவது: 1. உக்ரைனின் இறையாண்மை உறுதி செய்யப்படும். இதனை அனைத்து தரப்பும் கையெழுத்து மூலம் உறுதி செய்யப்படும்.2. இந்த ஆவணம் ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே ஒரு முழுமையான மற்றும் நிபந்தனையற்ற ஆக்கிரமிப்புக்கு எதிரான ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும். நீண்ட கால அமைதியை உறுதி செய்யும் வகையில் கண்காணிக்கும் வகையில் அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்படும். 3. உக்ரைனுக்கு வலிமையான பாதுகாப்பு உத்தரவாதங்கள் அளிக்கப்படும்.4. அமைதி காலத்தில்உக்ரைனின் ஆயுதப்படைகள் 800000 நபர்கள் இருப்பார்கள்.5. அமெரிக்கா, நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உக்ரைனுக்கு பாதுகுாப்பு உத்தரவாதங்களை வழங்கும் a. உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தால், ராணுவ ரீதியில் பதிலடி கொடுப்பதுடன், சர்வதேச அளவில் மீண்டும் தடை அமல்படுத்தப்படும்.b. ரஷ்யா மீது உக்ரைன் படையெடுத்தாலோ அல்லது துப்பாக்கிச்சூடு நடத்தினாலோ பாதுகாப்பு உத்தரவாதங்கள் ரத்து செய்யப்படும். 6. ஐரோப்பா மற்றும் உக்ரைன் மீது படையெடுக்காதவகையில் கொள்கை ஒன்றை ரஷ்யாஉருவாக்கவேண்டும்7. உக்ரைன் ஐரோப்பிய யூனியனின் உறுப்பினராக குறிப்பிடத்தக்க காலம் சேர்ககப்படும். 8. உக்ரைனில் முதலீடு மற்றும் எதிர்கால வளர்ச்சிக்காக சர்வதேச வளர்ச்சி திட்டங்கள் ஏற்படுத்தப்படும்.9. உக்ரைன் பொருளாதாரம் மீண்டு வருவதற்கு நிதி ஏற்படுத்தப்படும்10. ஒப்பந்தம் ஏற்பட்ட பின்னர், உக்ரைன், அமெரிக்கா உடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவாரத்தையை துவக்கே வண்டும்11. அணு ஆயுத இல்லாத நாடு என்பதை உக்ரைன் உறுதிபடுத்த வேண்டும்12. ஜபோரிஜ்ஜியா அணுசக்தி நிலையத்தை அமெரிக்கா, ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகள் இணைந்து நிர்வகிக்கும்.13. புரிதல் மற்றும் பல்வேறு கலாசாரங்களை உள்ளடக்கிய புரிதலை ஏற்படுத்த இரு நாடுகளும் பள்ளிகளில் நிகழ்ச்சி நடத்த வேண்டும்14. டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க், சபோரிஜியா மற்றும் கெர்சன் பிராந்தியங்களில், இந்த ஒப்பந்தம் கையெழுத்தான தேதியின்படி எல்லையாக அங்கீகரிக்கப்படுகிறது.15. பிராந்திய ஒப்பந்தங்களை ரஷ்யா அல்லது உக்ரைன் வலுக்கட்டாயமாக மாற்றக்கூடாது.16. டின்ப்ரோ நதியை வணிக நோக்கத்துக்காக உக்ரைன் பயன்படுத்துவதை ரஷ்யா தடுக்கக்கூடாது.17. நிலுவையில் உள்ள பிரச்னைகளை தீர்க்க குழு ஏற்படுத்தப்படும்.18. அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, உக்ரைன் விரைவாக தேர்தலை நடத்த வேண்டும்.19. இந்த ஒப்பந்தம் சட்டப்பூர்வமாக கையெழுத்தாகும். இதனை அதிபர் டிரம்ப் தலைமையிலான குழு கண்காணிக்கும். உக்ரைன், ஐரோப்பா, நேட்டோ , ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும்.20. அனைவரும் ஏற்றுக் கொண்ட பிறகு இந்த ஒப்பந்தம் உடனடியாக அமலுக்கு வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

MARUTHU PANDIAR
டிச 24, 2025 23:50

நிற்க வாய்ப்பில்லை. டிரம்ப்பின் பதவிக்காலம் முடிந்து விடும். புடின் தொடர்வார்..... .அதிபராகவும் கூட.


இளந்திரையன் வேலந்தாவளம்
டிச 24, 2025 22:42

super comedy point number 5b


ஆரூர் ரங்
டிச 24, 2025 21:43

முன்பு கொரியா , வியட்நாம் மாதிரி உக்ரேனை இரண்டாக உடைத்து அமெரிக்கா, ரஷியா ஆதிக்கம் செலுத்தும் திட்டம்? வெளங்கிடும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை