உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / செங்கடலில் வர்த்தக கப்பல்களை குறிவைப்போம்; ஏமன் நாட்டு ஹவுதி பயங்கரவாத அமைப்பு அறிவிப்பு

செங்கடலில் வர்த்தக கப்பல்களை குறிவைப்போம்; ஏமன் நாட்டு ஹவுதி பயங்கரவாத அமைப்பு அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: ''செங்கடலில் செல்லும் வர்த்தக கப்பல்களை குறி வைத்து தாக்குதல் நடத்துவோம்'' என ஹவுதி பயங்கரவாத அமைப்பினர் அறிவித்துள்ளனர்.மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீன பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே கடந்த 2023 அக்டோபரில் போர் துவங்கியது. இந்தப் போரில், ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு, அண்டை நாடான ஏமனில் இருந்து செயல்படும் ஹவுதி பயங்கரவாத அமைப்பு ஆதரவு தெரிவித்தது. ஈரானின் ஆதரவு பெற்றது ஹவுதி பயங்கரவாத அமைப்பு. செங்கடல் உள்ளிட்ட கடல் பகுதிகளில், அமெரிக்காவின் சரக்கு கப்பல்கள் உள்ளிட்டவற்றின் மீது ஹவுதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.கடந்த சில மாதங்களாக இத்தகைய தாக்குதல் இல்லை. தற்போது ஈரான், இஸ்ரேல் இடையே மோதல் ஒன்பது நாட்களுக்கு மேலாக நீடித்து வருகிறது.இந்நிலையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் மீது அமெரிக்க விமானப்படையும் தாக்குதல் நடத்தியுள்ளது. அமெரிக்க விமானப்படை போர் விமானங்கள், ஈரான் நாட்டின் அணுசக்தி நிலையங்கள் மீது இரவோடு இரவாக குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளன.இதனால் செங்கடல் பகுதியில் செல்லும் சர்வதேச வர்த்தக கப்பல்களை குறி வைத்து தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சி குழுவினர் அறிவித்துள்ளனர். ஏமனில், ஹவுதி அமைப்பு வலுவாக உள்ள பகுதிகளில், அமெரிக்க மற்றும் அதன் ஆதரவு நாடுகளைச் சேர்ந்த சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது. இதனால் சர்வதேச கப்பல் போக்குவரத்து பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

visu
ஜூன் 22, 2025 12:54

இந்த ஏமன் கூட போய் பேச்சுவார்த்தை நடத்திட்டு இருக்காங்க சகட்டு மேனிக்கு வேண்டாத காலாவதியான குண்டுகளையெல்லாம் வீசி சோதனை நடத்த வேண்டியதுதான் அப்புறம் கூழை கும்பிடு போடுவானுங்க


தமிழ் மைந்தன்
ஜூன் 22, 2025 12:18

ஏமனுக்கு ஆதரவாக செல்லக்கூடும் என்பதால் அமெரிக்க கவலை


Kasimani Baskaran
ஜூன் 22, 2025 10:53

சர்வதேச கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஏமனையும் அடித்து நொறுக்கவேண்டியதுதான். தீவிரவாதத்துக்கு ஆதரவு கொடுக்கும் அணைத்து நாடுகளையும் ஒழித்துக்கட்டவேண்டும்


Amar Akbar Antony
ஜூன் 22, 2025 10:11

பிரபஞ்சத்தின் அபாயம் அக்கிரமக்காரர்கள்


Raja k
ஜூன் 22, 2025 09:28

ஏற்கனவே ஏமன் வறுமையில கிடக்கு, இதுல இவனுக வேற,


பெரிய ராசு
ஜூன் 22, 2025 08:58

இவனுக்களை அடியோடு ஒழிக்கும் வரை நிம்மதி கிடையாது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை