உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / லண்டனில் பாக். தூதரக அலுவலகம் மீது தாக்குதல்: இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் கைது

லண்டனில் பாக். தூதரக அலுவலகம் மீது தாக்குதல்: இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லண்டன்: லண்டனில் பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தை தாக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பஹல்காம் சம்பவத்தை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. ஜம்மு காஷ்மீர் பகுதியில் அவ்வப்போது பாக். ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. சந்தேக நபர்களை தேடி ராணுவம் ஒவ்வொரு பகுதியாக முன்னேறி வருகிறது. பாகிஸ்தானுக்கு எதிராக சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. இந்நிலையில் லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தை ஒருவர் தாக்கி உள்ளார். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். சம்பவத்தின் போது அலுவலகத்தில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது.அப்போது அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடிகளை ஒருவர் சேதப்படுத்துவதாக அதிகாரிகள் போலீசாருக்கு அவசர தகவல் அனுப்பினர். உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார், அங்கித் லவ் என்னும் 41 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை கைது செய்தனர். பின்னர், அவரை வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த சம்பவத்தை அடுத்து, தூதரக அலுவலகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Ramesh Sargam
ஏப் 29, 2025 21:09

அவன்தான் உண்மையான வீரன். லண்டன் போலீஸ் அவனை விடுவிக்கவேண்டும்.


Senthoora
ஏப் 30, 2025 05:39

இந்தியாவில எதனை பேரை விசாரணையே இல்லாமல் வித்திருக்கு, அவன் நாட்டில் பொய் வாலாட்டினால் சும்மா இருப்பானா.


Muthukrishnan Srinivasan
ஏப் 29, 2025 14:17

காலிஸ்தான் போராட்டக்காரர்கள் இலண்டனில் இந்திய தூதரகத்தில் தாக்குதல் நடந்தபோது யாரையும் காவல்த்துறை கைது செய்யவில்லை. பிரித்தானியர் தொழிலார் கட்சி மற்றும் காவல்த்துறை இந்தியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கூடியதாக உள்ளது அதற்க்கு அங்கு பாகிஸ்தானை பூர்விகமாக கொண்ட மேயரும் காரணம் அவர் பிரித்தானியாவில் வாழும் இந்திய வம்சாவளியை சார்ந்தவர், இந்தியாவில் இருந்து வேலைக்கு சென்றவர் இல்லை.


Narayanan Ganesan
ஏப் 29, 2025 12:35

பால்கனியிலிருந்து கழுத்தை அறுப்பது போல் சைகை செய்த பாகிஸ்தான் தூதரக அதிகாரி மேல் என்ன நடவடிக்கை eduthieergal.


Tetra
ஏப் 29, 2025 13:35

மேலும் உதவி


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 29, 2025 12:14

ஐரோப்பாவில் குறிப்பாக பிரிட்டனில் தலையெடுத்துவிட்டது ....


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 29, 2025 14:06

நாகரிகமாக எழுதப்படும் கருத்துக்களை சேதப்படுத்தும்


Apposthalan samlin
ஏப் 29, 2025 11:45

போணமா வேலை பார்த்தோமா பணத்தை வீட்டுக்கு அனுப்பினோமா என்று இருக்கணும் தேவை இல்லாத வேலை .இது தான் தனக்கு தானே ஆப்பை சொருகி கொள்வது .உதவிக்கு எவனும் வர மாட்டான் .


கண்ணன்
ஏப் 29, 2025 11:36

.. விட்டுவிட்டாரே!


வாய்மையே வெல்லும்
ஏப் 29, 2025 09:40

பாக்கிஸ்தான் தூதரத்துக்கு கல்லடி.. இதை கவனிச்ச நம்ம அடிலெய்டு கவலையில் ஜுரம் வந்துட்டு... ஹாஹாஹா.. வாலாட்டினா வினைகள் விபரீதமாக இருக்கும் என்று பொய்யர்களுக்கு சூளுரைக்கின்ற நாள் இன்று ..


செல்வேந்திரன்,அரியலூர்
ஏப் 29, 2025 09:26

லண்டனில் உள்ள அந்த தேசப்பற்றாளருக்கு ஒரு ராயல் சல்யூட்....


Senthoora
ஏப் 29, 2025 13:29

அவங்க இங்க மாதிரி வாலாட்ட முடியாது, ஆர்ப்பாட்டம் செய்துட்டு ஓடிட்டானாலுவோல் , மாட்டிகிட்டது ஒருத்தன், சலூட் அடிப்பது இருக்கட்டும், அவர்கள் ஜெயிலில் போட்டால் அந்த குடும்பத்துக்கு நீங்க சோறு போடுவீங்களா? வெளிநாட்டில் ஆர்ப்பாட்டம் செய்யலாம், அதுக்கு ஒரு வரை முறை இருக்கு.


புதிய வீடியோ