உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சர்வதேச விண்வெளி மையம் செல்கிறார் சுபான்சு சுக்லா!

சர்வதேச விண்வெளி மையம் செல்கிறார் சுபான்சு சுக்லா!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: நாசா சார்பில் சர்வதேச விண்வெளி மையத்துக்கு செல்லும் ஆக்சியம் 4 தனியார் திட்டத்தின் பைலட் ஆக சுபான்சு சுக்லா செயல்படுவார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தில், இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையம் ஈடுபட்டு உள்ளது. முந்தைய சோவியத் யூனியன், அமெரிக்கா மற்றும் சீனா மட்டுமே விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பியுள்ளன. இந்நிலையில், விண்வெளிக்கு விமானப்படையைச் சேர்ந்த குரூப் கேப்டன்கள் பிரசாந்த் நாயர், அஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப் மற்றும் விங் கமாண்டர் சுபான்சு சுக்லா ஆகியோர் செல்ல உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்த வருகிறது.இந்நிலையில், இந்திய விமானப்படை வீரரும், இஸ்ரோவின் ககன்யான் திட்டத்தில் விண்வெளி செல்வதற்கு தேர்வு செய்யப்பட்டவருமான சுபான்சு சுக்லா, நாசா சார்பில் சர்வதேச விண்வெளி மையத்துக்கு செல்லும் ஆக்சியம் 4 தனியார் திட்டத்தின் பைலட் ஆக செயல்படுவார் என அறிவிக்கபட்டுள்ளது.

யார் இந்த சுபான்சு சுக்லா!

* உத்தரபிரதேசத்தின் லக்னோவை சேர்ந்தவர் 39 வயதான குரூப் கேப்டன் சுபான்சு சுக்லா.* 2006ம் ஆண்டு இந்திய விமானப்படையில் பணியில் சேர்ந்தார். இவருக்கு 2,000 மணிநேரம் வானில் பறந்த அனுபவம் உள்ளவர்.* சுக்லா இந்திய விமானப்படையின் விமானங்களான Sukhoi-30 MKI, MiG-21S, MiG-29S, Jaguar, Hawks Dorniers மற்றும் N-32 போன்றவற்றை இயக்கி உள்ளார்.* 1984ம் ஆண்டு முதல் விண்வெளிக்குச் செல்லும் இந்தியாவின் இரண்டாவது விண்வெளி வீரராக சுபான்சு சுக்லா இருப்பார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Ray
ஜன 31, 2025 21:08

பல விமானங்களையும் 2000 மணிநேரம் ஒட்டியிருந்தாலும் ஏனோ இவர் லேட்டஸ்ட் ரபேலை ஒட்டியதாக சொல்லவில்லையே


Subramanian
ஜன 31, 2025 18:26

வாழ்த்துகள்


அப்பாவி
ஜன 31, 2025 16:54

விண்வெளிக்குப்.போனாலௌம் ஜாதிப்பேரை உட மாட்டாங்க.


Ray
ஜன 31, 2025 19:22

"SHUKLA" IS A SURNAME PRIMARILY ASSOCIATED WITH THE BRAHMIN CASTE IN INDIA, ORIGINATING FROM THE SANSKRIT WORD "SHUKLA" MEANING "WHITE, BRIGHT, OR PURE" ESSENTIALLY, A SHUKLA IS A BRAHMIN WITH A SURNAME SIGNIFYING PURITY AND CLEANLINESS ACCORDING TO TRADITIONAL HINDU BELIEFS.


Karthikeyan Palanisamy
ஜன 31, 2025 15:13

இது ஈவேராக்கு்கிடைத்த வெற்றி… அவர் மட்டும் இல்லைன்னா


Ray
ஜன 31, 2025 21:05

இவர் ஒரு ப்ராஹ்மணர் தெரிஞ்சுக்கோ


kulandai kannan
ஜன 31, 2025 14:02

ஐயகோ! வடக்கனா (Dravidan mind voice)


Oru Indiyan
ஜன 31, 2025 13:01

வாழ்த்துக்கள்


சமீபத்திய செய்தி