உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பயங்கரவாதத்தை ஒழிக்க துணை நிற்போம்: இந்திய எம்.பி.,க்கள் குழுவிடம் அமெரிக்கா உறுதி

பயங்கரவாதத்தை ஒழிக்க துணை நிற்போம்: இந்திய எம்.பி.,க்கள் குழுவிடம் அமெரிக்கா உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: ''பயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியாவுக்கு துணை நிற்போம்'' என இந்திய எம்.பி.,க்கள் குழுவிடம் அமெரிக்கா உறுதி அளித்துள்ளது.பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானுக்குள் நுழைந்து இந்தியா பயங்கர தாக்குதலை நடத்தியது. இதன் பிறகு, பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை உள்ளிட்டவை பற்றி ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெற்றுள்ள நாடுகள் மற்றும் நட்பு நாடுகளுக்கு இந்திய எம்.பி.,க்கள் குழு நேரில் சென்று விளக்கம் அளித்தது.அமெரிக்காவிற்கு சென்ற இந்திய குழுவிடம், ''பயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியாவுக்கு துணை நிற்போம்'' என அந்நாட்டு வெளியுறவுத்துறை துணைச் செயலாளர் யோஷிதா சிங் உறுதி அளித்துள்ளார். அமெரிக்காவில் பார்லிமென்ட் குழுவினரிடம் இந்தியாவின் நிலைப்பாட்டை காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் தலைமையிலான குழு விளக்கம் அளித்தது. இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை துணைச் செயலாளர் யோஷிதா சிங் வெளியிட்டுள்ள அறிக்கை:பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் அமெரிக்கா இந்தியாவுடன் உறுதியாக நிற்கிறது என்பதை நான் மீண்டும் உறுதிப்படுத்தினேன். இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக உறவை வலுப்படுத்துவது குறித்து விவாதம் நடந்தது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் எதிர்க்க வேண்டும் என இந்தியா உறுதியான நிலைப்பாட்டை எடுத்துரைத்தது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Oviya vijay original
ஜூன் 07, 2025 21:38

அவங்களை பற்றி எல்லாம் இவ்ளோ கவலைப்பட வேண்டாம். முதலில் நம்மிடையே, நமக்குள்ளே இருக்கும் துரோகிகளை கருவருக்க வேண்டும்.


canchi ravi
ஜூன் 07, 2025 19:19

பயங்கரவாதத்தையும் தூண்டுவோம், துணையாகவும் நிற்போம்.


spr
ஜூன் 07, 2025 17:57

துரதிர்ஷடவசமாக எந்த ஒரு குற்றச் சம்பவத்திலும் பாதிக்கப்பட்டவரைக் குறித்த அக்கறை எவருக்குமே இருப்பதில்லை. குற்றம் செய்தவரைத் தண்டனையிலிருந்து காக்க அவருக்காக அவர் வழக்காடுபவர் செய்தால் அது தொழில் ஆனால் ஊடகங்களோ, பொதுமக்களோ குற்றவாளிகளுக்கு ஆதரவாக கேள்வி கேட்பது மனிதப் பண்பு அல்ல. பாகிஸ்தான் தவறு செய்யவில்லையென்றால், இந்தப் பயங்கரவாதத்திற்கு எங்களது அரசு உதவவில்லை என்று சொல்லி தவறு செய்தவர் எவராயினும் இந்தியா பிடித்து தண்டனை கொடுக்கலாம் எங்களிடமிருந்தால் நாங்களே ஒப்படைக்கிறோம் என்று சொல்லியிருக்கலாம் இந்திய அரசுடன் ஒத்துழைப்பு கொடுத்து அவர்களைக் கண்டுபிடிக்க உதவியிருக்கலாம் குறைந்த பட்சம் உலக அளவில் பட்டியலிடப்பட்ட பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கில் பங்கேற்றிருக்க வேண்டாம். இதற்கு மேலும் ஆதாரம் கேட்பது எதிர்க் கட்சிகளும் ஊடகங்களுமே திரு சசி இப்படி கூடப் பதில் சொல்லியிருந்தால் சிறப்பு.


spr
ஜூன் 07, 2025 17:39

ஆயுதங்களை விற்பது ஒவ்வொரு நாட்டுக்கும் வியாபாரம். இனி வரும் நாளில் இந்தியாவும் அதிக அளவில் பல நாடுகளுக்கு செய்யப் போகிறது. காசிருந்தால் மட்டுமே ஆயுதம் வாங்க முடியும் காசு கொடுப்பவனுக்கு ஆயுதம் தருவதில் பிரச்சனை இல்லை. ஆனால் அந்தக் காசை பயங்கரவாதத்தை உருவாக்கி ஊக்குவிக்கும் பாகிஸ்தானுக்கு உதவி என்ற பெயரில் தருவதோ போரில் துணை நிற்பதோதான் பிரச்சினை அந்நிய நாடுகள் குறிப்பாக இந்தியாவை முன்னேற விடக்கூடாது என்று நினைப்பவர்கள் செய்யும் செயல் இந்தியாவில் இருக்கும் எதிரிக் கட்சிகளே அப்படிச் செய்யும் போது அந்நிய நாடுகளைக் குறை சொல்லி என்ன பலன்?


KavikumarRam
ஜூன் 07, 2025 16:25

அமெரிக்காவையும் சைனாவையும் ஒரு பத்தடி தூரத்திலியே நிப்பாட்டி வைத்து பழகணும். ஹாய் பை என்ற இடத்திலேயே இவர்கள் இருவரையும் நிறுத்த வேண்டும். ரெண்டு பேருமே மாபெரும் கயவர்கள்.


Ramesh Sargam
ஜூன் 07, 2025 12:14

ஒரு பக்கம் துணை நிற்போம் என்று கூறுவது. மறுபக்கம் பயங்கரவாதத்தை வளர்க்கும் பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு ஆயுதங்கள் கொடுத்து உதவுவது. இந்த அமெரிக்காக்காரனை நம்பவே கூடாது.