உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உலக கோப்பை செஸ்: பைனலில் ஹம்பி, திவ்யா; வரலாறு படைத்த இந்தியா

உலக கோப்பை செஸ்: பைனலில் ஹம்பி, திவ்யா; வரலாறு படைத்த இந்தியா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பதுமி: உலக கோப்பை செஸ் தொடரின் பைனலுக்கு இந்திய வீராங்கனைகள், ஹம்பி, திவ்யா இருவரும் முன்னேறினர். ஜார்ஜியாவில், பெண்களுக்கான உலக கோப்பை செஸ் தொடர் நடக்கிறது. இதன் அரையிறுதியில் அசத்திய இந்தியாவின் திவ்யா, சீனாவின் ஜோங்கியை வீழ்த்தி, முதன்முறையாக பைனலுக்கு முன்னேறினார். மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் கொனேரு ஹம்பி, சீனாவின் லெய் டிங்ஜீ மோதினர். இரண்டு போட்டிகளின் முடிவில் ஸ்கோர் 1.0 - 1.0 என சமநிலையில் இருந்தது.நேற்று, 'டை பிரேக்கர்' நடந்தது. இதன் முதல் போட்டியில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய ஹம்பி, 65வது நகர்த்தலில் தோல்வியடைந்தார். இரண்டாவது போட்டியில் வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய ஹம்பி, 39வது நகர்த்தலில் வெற்றி பெற, 2.0 - 2.0 என மீண்டும் சமநிலை வகித்தது.அடுத்த 4 போட்டியில், 3ல் அசத்திய ஹம்பி, முடிவில் 5.0 - 3.0 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தார். பைனலில் இந்தியாவின் ஹம்பி, திவ்யா மோதுகின்றனர். உலக கோப்பை பைனலுக்கு முதன்முறையாக இரண்டு இந்திய வீராங்கனைகள் தகுதி பெற்று வரலாறு படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

peermohammednurullaraja peermohammednurullaraja
ஜூலை 25, 2025 12:37

இந்தியா வெற்றி பெறும்


ANNADURAI MANI
ஜூலை 25, 2025 08:50

கப் நமதே


ANNADURAI MANI
ஜூலை 25, 2025 08:28

வெற்றி


SANKAR
ஜூலை 25, 2025 06:32

This is great.We captured the place as status of old Russia: Chess Super Power. Anand started it all. I understand it Is Divya is just 10 years old.


GUNA SEKARAN
ஜூலை 25, 2025 05:41

மிக மிக அருமை. ஹம்பி திவ்யா வாழ்த்துக்கள்.


Kasimani Baskaran
ஜூலை 25, 2025 03:53

ஹம்பி, திவ்யா ஆகிய இருவருக்கு வாழ்த்துகள்.


Mahesh
ஜூலை 25, 2025 01:25

வெள் done


புதிய வீடியோ