உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உலகின் முதல் டிரில்லியனர் பட்டியல்; இந்தியருக்கு எந்த இடம்; ஆய்வு நிறுவனம் தகவல்

உலகின் முதல் டிரில்லியனர் பட்டியல்; இந்தியருக்கு எந்த இடம்; ஆய்வு நிறுவனம் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

துபாய்: லட்சாதிபதி, கோடீஸ்வரர் வரிசையில், மில்லியனர், பில்லியனர் என்பதை கடந்து இப்போது டிரில்லியனர் வரும் காலம் நெருங்கி விட்டது. உலகின் முதல் டிரில்லியனர், எக்ஸ் தள உரிமையாளர் எலான் மஸ்க் என்கிறது ஆய்வு நிறுவனம்.இந்திய எண் முறைப்படி, லட்சம், கோடி என்றால் மட்டுமே நமக்குத்தெரியும். மில்லியன், பில்லியன் என்பது, மேற்கத்திய நடைமுறை. மில்லியன் என்றால், 10 லட்சம், பில்லியன் என்றால், 100 கோடி. ஒரு டிரில்லியன் என்றால், ஒரு லட்சம் கோடி.நம் நாட்டில் லட்சாதிபதி, கோடீஸ்வரர் என்பதை, மேற்கத்திய நாடுகளில், மில்லியனர், பில்லியனர் என்பர். இப்போது டிரில்லியனர் உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.தற்போதுள்ள சொத்து மதிப்பு, வருவாய் ஆகியவற்றை கணக்கிட்டால், எக்ஸ் தளம், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் உரிமையாளர் எலான் மஸ்க், 2027ம் ஆண்டில் உலகின் முதல் டிரில்லியனர் ஆகி விடுவார்.இதை துபாயை சேர்ந்த இன்பார்மா கனெக்ட் என்ற ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. அவரது தற்போதைய சொத்து மதிப்பு 241 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.இதே கணக்குப்படி, உலகின் இரண்டாவது டிரில்லியனர் ஆக, இந்தியர் ஒருவர் வருவார் என்கிறது அந்த நிறுவனம்.அதானி நிறுவன தலைவர் கவுதம் அதானி, 2028ல் டிரில்லியனர் ஆகி விடுவார் என்பது கணக்கு. பேஸ்புக் அதிபர் மார்க் உட்பட மேலும் 3 பேர், 2030ம் ஆண்டுக்குள் டிரில்லியனர் ஆகி விடுவர் என்றும் அந்நிறுவன ஆய்வில் தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Vinay
செப் 10, 2024 22:18

ஏன்டா உங்களுக்கு மூளை கீழே இருக்கா , அவன் மட்டமான நிலக்கரியை உயர்தர நிலக்காரின்னு சொல்லி நம்ம எடபாடிகிட்ட வித்து நம்ம தலைல மொளகாய் அறைச்சிட்டு போய்ட்டான் , இப்ப இருக்கிற நாயிங்களும் அதை அப்படியே அமுக்கிட்டானுங்க, இவனால் நாடு விளங்காம போகும், அதிக விட்டு காமெடி பண்ணி கடுப்பத்தாதே.......


தாமரை மலர்கிறது
செப் 10, 2024 19:25

இன்னும் ஐந்தே வருடத்தில் அதானி உலகின் முதல் பணக்காரர் ஆகி, ஒவ்வொரு இந்தியரும் காலரை தூக்கிவிட்டுக்கொண்டு வீறாப்பாக நடக்கும் படி பெருமையை நிலைநாட்டுவார். அடானியின் எழுச்சி, இந்தியாவின் எழுச்சியை காட்டும். இந்தியாவின் பொருளாதார வலிமையை உலகுக்கு காட்டும். இன்று சீனாவை பார்த்து உலகம் பயப்படுகிறது. அதானி முதல் பணக்காரர் ஆனவுடன், இந்தியாவை பார்த்து உலகம் பயப்படும்.


M.S.Ramachandran
செப் 10, 2024 16:55

இந்தியர் எண்பது நமக்குபெறுமை மற்ற இந்தியரையும் வழி காட்டீ வளர்க்கவும் வேண்டும் கூடி வாழ்ந்தால் கோடீ நண்மை


Apposthalan samlin
செப் 10, 2024 16:34

இந்தியா அம்பானி அதானி கையில் உளது பிஜேபி ஆட்சி இருக்கும் வரை இவர்கள் தான்


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 10, 2024 17:33

சாராய ஆலை தலைவர்களுக்கு நன்றி காட்டணும் ன்னா இப்படித்தான் எழுதியாகணும் ...


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 10, 2024 16:20

என்னை ஏண்டா குறுகுறு ன்னு பாக்குறீங்க ...


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 10, 2024 17:31

புலிகேசி மன்னர் கடுப்பு .....


Muthuraman
செப் 10, 2024 15:49

நமது நாட்டில் ஏற்கனவே நிறைய ட்ரிலியனயர் உள்ளனர் அரசியல் வாதிகள் அவர்கள் ஆவர்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை