உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நீங்க இப்ப பிரதமர் கிடையாது; கனடா பிரதமருக்கு எலான் மஸ்க் பதிலடி

நீங்க இப்ப பிரதமர் கிடையாது; கனடா பிரதமருக்கு எலான் மஸ்க் பதிலடி

வாஷிங்டன்: டிரம்பின் கருத்தை விமர்சித்திருந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு தொழிலதிபர் எலான் மஸ்க் கிண்டலாக பதிலடி கொடுத்துள்ளார். அமெரிக்கா, 50 மாகாணங்களை உள்ளடக்கிய நாடு. இதில், 51வது மாகாணமாக அண்டை நாடான கனடாவும் இணைந்து கொள்ள வேண்டும் என்று அதிபராக தேர்வாகியுள்ள டிரம்ப் வலியுறுத்தி வருகிறார். 'கனடா, அமெரிக்காவுடன் இணைந்தால் வரிகள் இருக்காது; வர்த்தகப் பற்றாக்குறை இருக்காது. கனடா பாதுகாப்பாக இருக்கும்' உள்ளிட்ட ஆபரையும் அவர் வழங்கினார் https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=6yka0rcc&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதுமட்டுமில்லாமல், அமெரிக்கா, கனடா இணைந்து ஒரே நாடாக இருப்பது போன்ற வரைபடத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு, கனடா ஆட்சியாளர்களை கோபத்திற்குள்ளாக்கினார். அமெரிக்க அதிபரின் இந்த செயலுக்கு, அண்மையில் பிரதமர் பதவியில் இருந்து விலகப் போவதாக அறிவித்துள்ள ஜஸ்டின் ட்ரூடோ பதிலடி கொடுத்திருந்தார். கனடா அமெரிக்காவின் ஒரு பகுதியாக மாற்றும் திட்டத்திற்கு துளியளவும் வாய்ப்பில்லை என்றும், இரு நாடுகளும் மிகப்பெரிய வர்த்தகம் மற்றும் பாதுகாப்பில் நட்புடன் இருப்பதாகவும் கூறியிருந்தார். அவரது இந்தப் பேச்சை கிண்டலடிக்கும் விதமாக, பிரபல தொழிலதிபரும், டிரம்ப்பின் அரசில் பங்கு பெற இருப்பவருமான எலான் மஸ்க், 'நீங்க ஒன்னும் கனடாவின் பிரதமர் கிடையாது. அதனால், நீங்கள் எது சொன்னாலும் பரவாயில்லை,' என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Naga Subramanian
ஜன 25, 2025 10:27

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவினால் வந்த வினை. இந்த நபர் ஒரு மேற்கத்திய திராவிட வியாதி.


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
ஜன 09, 2025 11:44

அமெரிக்க எப்பொழுதும் தனக்கு இல்லாத எதிரியை தேடிப் போய் கண்டுபிடித்து எதிரியாக்கி அதனுடன் மல்லுக்கு நிற்கும். இது அமெரிக்கா சி ஜ ஏ ஃபார்முலா.


samvijayv
ஜன 09, 2025 10:21

இந்தியாவிற்கு ஒரு பாகிஸ்தான் என்றால், அமெரிக்காவுக்கு வரும் காலங்களில் கனடா ஒரு தலைவலியை தரும்...


Kasimani Baskaran
ஜன 09, 2025 07:49

கனடா டுரூடோவின் தலைமையில் தீவிரவாத ஆதரவு நாடாகவே மாறிவிட்டது. அதை சரி செய்யவே ஒரு மாமாங்கம் பிடிக்கும்.


Barakat Ali
ஜன 08, 2025 22:39

அசிங்கப்பட்டான் ஜஸ்டின் ட்ரூடோ ....


சமீபத்திய செய்தி