உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / 14 இந்தியர்களை திருப்பி அனுப்பிய பாக்.,: ஹிந்துக்கள் என காரணம் சொல்கிறது

14 இந்தியர்களை திருப்பி அனுப்பிய பாக்.,: ஹிந்துக்கள் என காரணம் சொல்கிறது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இஸ்லாமாபாத்: சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக் தேவின் 556வது ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்ட இந்தியர்களில் 14 பேரை பாகிஸ்தான் திருப்பி அனுப்பியுள்ளது. அதற்கு அவர்கள் ஹிந்து மதத்தை சேர்ந்தவர்கள் என காரணம் தெரிவித்துள்ளது.குருநானக் தேவ் பிறந்த இடம் பாகிஸ்தானின் லாகூர் அருகே உள்ளது. நங்கனா சாஹிப் குருத்வாரா எனப்படும் இங்கு நவம்பர் 5 துவங்கி ஒரு வாரம் அவரது பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ளது. பாகிஸ்தான் அரசு இதற்காக 2,150 இந்தியர்கள் மற்றும் வெளிநாடு வாழ் சீக்கியர்களுக்கு விசா வழங்கியுள்ளது.முதற்கட்டமாக , இந்திய சீக்கியர்கள் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள வாகா எல்லை வழியாக 1,900 பேர் நங்கனா சாஹிப் குருத்வாரா சென்றனர். ஆனால், 14 பேரை ஹிந்துக்கள் என காரணம் சொல்லி அவர்களை பாகிஸ்தான் அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளனர். அவர்கள் அனைவரும் பாகிஸ்தானில் பிறந்த ஹிந்துக்கள் ஆவார்கள். அவர்கள் இந்திய குடியுரிமை பெற்று டில்லி மற்றும் லக்னோவில் தங்கியுள்ளனர். பாகிஸ்தானில் வசிக்கும் உறவினர்களை சந்திப்பதற்காக சென்றனர். ஆனால் பாகிஸ்தானிய அதிகாரிகள், சீக்கிய மதத்தை சேர்ந்தவர்களை மட்டுமே அனுமதிப்போம். நீங்கள் ஹிந்துக்கள். உங்களுக்கு அனுமதி வழங்க முடியாது, ' என அவமானப்படுத்தி திருப்பி அனுப்பிவிட்டதாக தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

SUBBU,MADURAI
நவ 06, 2025 01:41

மனிதன் என்கிற பெயரில் ஒளிந்து கொண்டு இந்த மூர்க்க வன்ம கருத்தை எப்படி பதிவிடுறான் பாருங்க...


மனிதன்
நவ 05, 2025 19:52

எப்படியோ.., பாகிஸ்தான், பாகிஸ்தான் தீவிரவாதி என்று அவனை கேவலப்படுத்தி அரசியல் செய்தது அவனுக்கு தெரியும்தானே... இதோ, இப்போ அவனும் தொடங்கிட்டான்ல வெறுப்பு அரசியலை???


ஆரூர் ரங்
நவ 05, 2025 19:45

சீக்கியர்கள் ஹிந்துக்களில்லை என நம்ப வைத்தது ஆங்கிலேய அரசின் தந்திரம்.


V RAMASWAMY
நவ 05, 2025 18:52

நாம் சும்மா இருக்கலாமா? இனி செகுலர் என்கிற போர்வை தேவையா?


மனிதன்
நவ 05, 2025 19:54

நாமதானே வெறுப்பை தொடங்கி வைத்தது.... இதோ இப்ப அவனும் அதே வெறுப்பை கக்குறான்


SUBBU,MADURAI
நவ 06, 2025 01:45

கூடிய விரைவில் உன்னைப் போன்ற தேச விரோத எல்லாம் உன் டொப்பிள் கொடி நாட்டுக்கு விரட்டி அடிக்கப் போகிறோம்


Kumar Kumzi
நவ 05, 2025 17:36

காதுகளுக்கு கேக்குதா


visu
நவ 05, 2025 17:31

அங்க இருந்து இந்தியாவில் உள்ள சொந்தக்காரர்களை பார்க்க வருபவர்களை திருப்பி அனுப்புங்க சரியா போய்டும்


RAMESH KUMAR R V
நவ 05, 2025 17:19

இதுபோல பாகிஸ்தானியர்களையும் அதன் ஆதரவாளிகளையும் இந்தியாவிலிருந்து விரட்ட வேண்டும். இவர்கள் இந்தியாவில இருந்துகொண்டு பாகிஸ்தானுக்கு ஜிந்தாபாத் சொல்லுகின்ற கூட்டம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை