உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்; புடினை சந்தித்து பேச தயார் என்கிறார் ஜெலன்ஸ்கி

போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்; புடினை சந்தித்து பேச தயார் என்கிறார் ஜெலன்ஸ்கி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கீவ்: ''போரை முடிவுக்கு கொண்டு வர, ரஷ்ய அதிபர் புடினை நேரில் சந்தித்து பேச தயாராக இருக்கிறேன்'' என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.உக்ரைன் மீது தொடர்ந்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்காக ரஷ்யா மீது இன்னும் பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறி வருகிறார். அதேநேரத்தில், பேச்சுவார்த்தை மூலம் அமெரிக்கஅதிபர் டிரம்ப் போர் நிறுத்தம் கொண்டு வர முயற்சி செய்கிறார்.இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியதாவது: போரை முடிவுக்கு கொண்டு வர, ரஷ்ய அதிபர் புடினை நேரில் சந்தித்து பேச தயாராக இருக்கிறேன். உக்ரைன் இந்த போரை ஒருபோதும் விரும்பவில்லை. மேலும் போரை தொடங்கிய ரஷ்யா தான் முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இது தொடர்பாக, ரஷ்ய அதிகாரிகள் கூறியதாவது:உயர்மட்ட சந்திப்புகளுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்வதற்கு முன்பு, நிறைய வேலைகள் செய்ய வேண்டும். இது தொடர்பாக, விரைவில் ஒரு உச்சிமாநாடு நடை பெறும். ரஷ்யா தற்போது உக்ரைனில் பல்வேறு பகுதிகளை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். டிரம்ப் நிர்வாகம் அமைதி முயற்சிகளை முன்னெடுக்க முயற்சித்த போதிலும், புடின் பேச்சுவார்த்தை நடத்த உடன்படவில்லை. ரஷ்யப் படைகள் இரவில் உக்ரைனில் பல்வேறு இடங்களில் வான்வழி தாக்குதல் நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

பேசும் தமிழன்
ஜூலை 23, 2025 18:39

ஒரு நடிகனை கட்டி கொண்டு அழுதால்..... இப்படி தான் நடக்கும்.... அடுத்தவன் பேச்சை கேட்டு சொந்த நாட்டு மக்களையே அழித்து விட துணிந்த பாவி இவர்.


Anand
ஜூலை 23, 2025 12:38

உக்ரைன் மக்கள் ஒரு கூமுட்டையை தேர்ந்தெதேடுதற்கு உண்டான பலனை இன்னமும் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள்.. ஜெலன்ஸ்கி அழிந்தால் உக்ரைன் உருப்படும்... நேட்டோ தன்னை ஒரு தீயசக்தி என நிரூபித்துள்ளது.


தத்வமசி
ஜூலை 23, 2025 11:31

இவர் ஒரு காமெடி நடிகராக இருந்து நாட்டின் தலைமை பொறுப்புக்கு வந்த பின்னும் ஆட்சியை காமேடியாக்கி நாட்டை நாசமாக்கி வருகிறார். நடுவில் இவர் தான் தின்னு கொழுக்கிறார். உருப்படி இல்லாத ஒருவனை தலைமை பொறுப்பில் அமர வைத்தால் இப்படித் தான் நடக்கும். இது தேவையே இல்லாத ஒரு போர். பணம்-மனம்-வாழ்வு-நாடு-இயற்கைவளம்-ஆயுதங்கள்-மனித உயிர்-நேரம் எல்லாம் இவரால் நஷ்டமாகிப் போகிறது.


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூலை 23, 2025 11:31

விட்டுக்கொடுத்து போகும் மனப்பான்மை இரு பக்கமும் இல்லை. போரை நிறுத்தும் செயலை விட அதில் விளம்பரம் தேட நினைக்கும் எண்ணத்திலேயே அமெரிக்கா அதிபர் உள்ளார். போரை நிறுத்தினால் அமெரிக்கா ஆயுதங்கள் விற்பனை உக்ரைனுக்கு நின்று விடும். அதனால் உக்ரைன் கனிம வளங்களை அமெரிக்கா அதிபர் மகன்களின் கம்பெனிக்கு குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வைக்கும் முயற்சியில் சிறிது தொய்வு ஏற்படும். ஆகவே அமெரிக்கா அதிபர் இன்னும் சிறிது காலத்திற்கு இந்த போரை நடத்தவே முயற்சி செய்வார். போரை நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் உண்மையிலேயே உக்ரைனுக்கு இருந்தால் அமெரிக்காவுடனான உறவை முறித்துக் கொண்டு தானாக போர் புரியாமல் ஐக்கிய நாடுகள் சபையின் உதவியை நாடுவது நல்லது. அமெரிக்காவுடன் ஏற்பட்டுள்ள கடனுக்கு கனிம வளங்கள் விற்பனையை பிறகு நட்பு நாட்டின் மேற்பார்வையில் அமெரிக்காவுடன் பேசி தீர்த்துக் கொள்ளலாம்.


ramesh
ஜூலை 23, 2025 11:15

இந்த முன்னாள் அரசியல் அரிச்சுவடி தெரியாத காமெடி நடிகனின் விருப்பத்துக்கு ஏற்ப உக்ரைன் மக்கள் இந்த போரால் தங்கள் உயிர் மற்றும் உடமைகளை இழந்து தெருவில் நிற்கிறார்கள் . ரஷ்ய படைகளிடம் சிக்கினால் சதாம் ஹுசைன் முடிவு தான் இவருக்கும்


saravan
ஜூலை 23, 2025 10:48

யாரை நம்பி போரிட முடிவெடுத்தார்...


HoneyBee
ஜூலை 23, 2025 10:18

இன்னுமா பேச விடறீக


S.V.Srinivasan
ஜூலை 23, 2025 09:48

சீக்கிரம் பேசி உங்க சண்டையை முடிங்கப்பா. உங்களாலே ஒட்டு மொத்த உலகமும் கஷ்ட படுது . சும்மா பேச தயார் பேச தயார்ன்னு உதார் விட்டுகிட்டு காலத்தை கடத்த வேண்டாம்.


சமீபத்திய செய்தி