உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ரஷ்யா மீது அமெரிக்கா கடுமையான தடைகளை விதிக்க வேண்டும்: ஜெலன்ஸ்கி விருப்பம்

ரஷ்யா மீது அமெரிக்கா கடுமையான தடைகளை விதிக்க வேண்டும்: ஜெலன்ஸ்கி விருப்பம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கீவ்: ''ரஷ்யா மீது அமெரிக்கா கடுமையான தடைகளை விதிக்க வேண்டும்'' என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.கடந்த 2022ம் ஆண்டு முதல் ரஷ்ய மற்றும் உக்ரைன் இடையிலான போர் நடைபெற்று வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தென்மேற்கு சமாரா பகுதியில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர். ரஷ்யா மீதான மிக மோசமான உக்ரைன் பதிலடி தாக்குதல்களில் இந்தத் தாக்குதல் ஒன்றாகும். இதனால் உக்ரைனில் தாக்குதலை தீவிரப்படுத்த ரஷ்யா திட்டமிட்டு வருகிறது. இந்த சூழலில், ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யா மீது 19வது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இந்நிலையில், ரஷ்யா மீது அமெரிக்கா கடுமையான தடைகளை விதிக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விரும்புகிறார். இது குறித்து ஜெலன்ஸ்கி கூறியதாவது: ஐரோப்பிய ஒன்றியம் உக்ரைனின் நலனுக்காக செய்த பல்வேறு விஷயங்களுக்காக நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இப்போது ரஷ்யா மீது அமெரிக்கா கடுமையான தடைகளை விதிக்க வேண்டும். இந்த நடவடிக்கையை அமெரிக்கா செய்யும் என்று எதிர்பார்க்கிறோம். ஐரோப்பிய ஒன்றியம் அதன் பங்கை செய்கிறது. இவ்வாறு ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். சமீபகாலமாக ரஷ்ய அதிபர் புடின் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார். போர் நிறுத்த ஒப்பந்தத்தில் புடின் தன்னை ஏமாற்றியதாக டிரம்ப் கூறி வருவதால், ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதிக்க வாய்ப்புள்ளதா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Saai Sundharamurthy AVK
செப் 21, 2025 12:35

அமெரிக்காவுக்கு ரஷ்யாவை பக்ஷித்துக் கொள்ளும் தைரியம் எல்லாம் கிடையாது. வெறும் பாவலா தான் காட்டும். மாறாக உக்கிரைன் தான் இவர்களுக்கு நடுவில் மாட்டிக் கொண்டு சாகிறது. ஜெலன்ஸ்கிக்கு உண்மையில் அக்கறை இருந்தால் இந்த அரசியலை புரிந்து கொண்டு ரஷ்யாவுடன் போரை நிறுத்தி விட்டு சமாதானமாகப் போய் விட வேண்டும். அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் உக்கிரைனின் கனிம வளங்கள் மீது தான் ஒரு கண். ஏதோ ஒரு படத்தில் எம்.ஜி.ஆரும், நம்பியாரும் சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள். அந்த சண்டையின் நடுவே எம்.ஜி.ஆர், எவன் சொத்துக்கோ நாமிருவரும் சண்டை போட்டுக்கொண்டு சாகிறோம் என்று ஒரு டயலாக் பேசுவார். அது தான் ஞாபகம் வருகிறது.


ராஜ்
செப் 21, 2025 12:17

எதிர்காலங்களில் அமெரிக்காவும் ரஷ்யாவும் உலகில் சீனாவின் வளர்ச்சியை தடுக்க ஒன்று சேர வாய்ப்பு உண்டு. ஆனால் ஊக்ரேன் நிலைமை அதோகதி தான்.


Barakat Ali
செப் 21, 2025 11:20

நீயி இருக்குற எடத்துல புல்லு முளைக்கிற வரைக்கும் ரஷ்யாகாரன் உட மாட்டான் ..... பார்த்துக்க .....


Prasanna Krishnan R
செப் 21, 2025 09:15

You deserve a death punishment


Kasimani Baskaran
செப் 21, 2025 08:51

நோ சான்ஸ்.. டிரம்ப் இப்பொழுது அமெரிக்காவுத்தான் பொருளாதாரத்தடையை படிப்படியாக அதிகரித்துக்கொண்டு வருகிறார்.


புதிய வீடியோ