நொய்டா பிஎச்இஎல்லில் அய்யப்ப பூஜை
நொய்டாவின் பி ஹெச் இ எல் சமூக மையத்தில் ஹம்சத்வானி குழுவினரால் சாஸ்தா ப்ரீத்தி பஜனைகள், நடைபெற்றது. இந்நிகழ்ச்சி பி எச் இ எல் அய்யப்ப பூஜை சமிதி, நொய்டாவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பல்வேறு தெய்வங்களின் அலங்கரிக்கப்பட்ட புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தன. மகா தீபாராதனையுடன் மகா பிரசாதம் அனைவருக்கும் வழங்கப்பட்டது. பக்தர்கள், கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், நொய்டா மட்டுமல்லாமல், கிரேட்டர் நொய்டா, தில்லி, காசியாபாத், இந்திராபுரம், வைஷாலியிலிருந்தும், வந்திருந்தினர். - நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்