உள்ளூர் செய்திகள்

பரத நாட்டியப் பள்ளி ஆண்டு விழா

நொய்டாவில் பவானி பிரஸன்னாலயா பரத நாட்டியப் பள்ளியின் 35வது ஆண்டு விழா புது தில்லி மயூர் விஹாரில் உள்ள ஶ்ரீ குருவாயூரப்பன் ஆலயத்தின் கார்த்தியாயினி கலையரங்கில் நடைபெற்றது. விழாவில் 35 மாணவிகள் பங்கேற்று நடனமாடினர். மாணவிகள் ஆடிய தசாவதார நடனம் அனைவராலும் பாராட்டப்பட்டது. விழாவிற்கு தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் துணைச் செயலாளர் (நிர்வாகம்) முனைவர் ஆர் கோபிநாத் முதன்மை விருந்தினராகவும், தில்லிக் கம்பன் கழகத் தலைவர் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய முதன்மை விருந்தினர் முனைவர் கோபிநாத் " நமது கலை மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் இத்தகைய நிகழ்ச்சிகளின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறினார். மேலும் குரு பவானி அனந்தராமன் இவ்வாறு பலதரப்பட்ட மாநிலங்களை சேர்ந்த குழந்தைகளுக்குப் பரதக் கலையை கற்று தருவதை நல்ல சேவை என்று பபுகழ்ந்தார். பின்னர் பேசிய கே வி கே பெருமாள், நாட்டிய நிகழ்ச்சிக்குப் பக்கபலமாக விளங்கிய சுதா ரகுராமன் உள்ளிட்ட இசைக் கலைஞர்களைப் பாராட்டினார். மேலும் கோபிநாத் போன்ற சிறந்த அதிகாரிகள் ஒரு நிறுவனத்தின் அதிகார மையத்தில் இருக்கும் பட்சத்தில் அந்த நிறுவனம் மட்டும் அன்றி பொது மக்களும் பயனடை வார்கள்" என்று கூறினார். பள்ளி அறங்காவலர் அனந்தராமன் அனைவரையும் வரவேற்றார். சமூக சேவகர் மீனா வெங்கி, வணிகத் துறை அதிகாரி சத்யா அசோகன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். குரு பவானி அனந்தராமன் நன்றி கூறினார். - நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !