உள்ளூர் செய்திகள்

நொய்டா கோவில்களில் தனுர் மாத பூஜைகள்

நொய்டா, வேதிக் பிரச்சார் சன்ஸ்தான் (விபிஎஸ்), ஒவ்வொரு ஆண்டும் போலவே, இந்த ஆண்டும், தனுர் மாத பூஜைகளை ஏற்பாடு செய்திருந்தது. விபிஎஸ் மூலம் நிர்வகிக்கப்படும் செக்டார் 22ல் உள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயில், மற்றும் செ்க்டர் 62 ல் உள்ள ஸ்ரீ விநாயகா ஸ்ரீ கார்த்திகேயா கோவில்களிலும் தொடர்ந்து தினமும் நடைபெற்றன. தினசரி ருத்ரா அபிஷேகம், ஸ்ரீ ராமர் பரிவாரத்திற்கு விசேஷ அலங்காரம் செய்யப்பட்டன. இந்தியா முழுவதும் உள்ள பிரபலமான தென்னிந்திய கோவில்களில் நடைபெறும் அதே வரிசையில் அனைத்து பூஜைகளும் நடைபெற்றன. இப்பூஜைகள், அபிஷேகம், அனைத்தும், ப்ரஹ்மஸ்ரீ ஸ்ரீராமின் தலைமையில் கோவிலின் வாத்தியார்கள் மணிகண்டன் சர்மா, மோஹித் மிஸ்ரா, ஜெகதீசன், ராஜாராம், ஜெகதீசன், ராஜாராம் மற்றும் விஷ்வேஸ்வர் ஆகியோரால் நடத்தப்பட்டது. பக்தர்களுக்கு காலையில் பிரசாதமாக 'பஞ்சாம்ருதம், வெண் பொங்கல்' விநியோகப்பட்டது. 'திங்களில் ஆரம்பித்து, திங்களிலேயே முடிவடைந்தது', என்பது குறிப்பிடத்தக்கது. கடும் குளிர் / மூடுபனியையும் பொருட்படுத்தாமல், அனைத்து பூஜைகளிலும் பங்கேற்ற பக்தர்களுக்கு கோயில் நிர்வாகத்தினர், நன்றி தெரிவிப்பதோடு அல்லாமல், பூஜைகளை சிறப்பாக நடைபெறுவதை உறுதி செய்ய, தினமும் கோவிலுக்கு வருகை தந்த உறுப்பினர்களான ஏ.பாலாஜி, ராஜு ஐயர், ராஜேந்திரன், ஸ்வாமிநாதன், ராதாகிருஷ்ணன், ஜானகி, ரேணுகா சிவராமன், புவனா ராதாகிருஷ்ணன் மற்றும் பலரையும் பாராட்டினர். - நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !