செந்தமிழ்ப்பேரவை சார்பில் இலவச செடிகள், மரக்கன்றுகள்
புதுதில்லி மயூர் விஹார் பேஸ் 3யில் உள்ள செந்தமிழ்ப் பேரவையின் சார்பில் மயூர் விஹார் பேஸ் 3 உள்ள குருத்வாரா அருகில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நீர்மோர், பந்தல் மற்றும் இலவச செடிகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைவர் A.மாரி தலைமை தாங்கினார் செயலாளர் S சரவணன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சமூக ஆர்வலர்கள் J.ராஜவேல் (Sr. Vice president, ISGEC Noida), சிவசங்கர் ஜெயராமன் (நாடி ஜோதிடர்), தமிழ் ஆசிரியை A.K.முத்துலட்சுமி மாரி கலந்து கொண்டு விழாவினை துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் இயற்கையை பாதுகாக்கும் விதம் 300 நபர்களுக்கு வாழைமரம், ரோஜா செடி, மல்லிகை பூச்செடி, கருவேப்பிலை மற்றும் துளசி செடிகள் இலவசமாக வழங்கப்பட்டது. 2000க்கும் மேற்பட்ட நபர்களுக்கு நீர் மோர் மற்றும் சுண்டல் வழங்கப்பட்டது. விழாவின் ஏற்பாடுகளை துணை தலைவர் A M ஆறுமுகம், பொருளாளர் K செல்வக்குமார், துணை பொருளாளர் N.ரவிக்குமார், இணை செயலாளர் R. கண்ணன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், G. அருள்செல்வம், V.தங்கராஜா, M.S.வெங்கடாசலபதி, S.மோகன் செய்திருந்தனர்.