நொய்டா கோவிலில் கார்த்திகை தீப திருவிழா
நொய்டா செக்டர் 62, ஸ்ரீ விநாயகா ஸ்ரீ கார்த்திகேயா கோவிலில் கார்த்திகையின் போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளக்குகள் ஏற்றப்பட்டன. திருவண்ணாமலையில் தீபங்கள் ஏற்றப்படுவது போலவே தீபங்கள் ஏற்றப்பட்டன. இந்த சிறப்பு நாளில், ஸ்ரீ கார்த்திகேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. கடும் 4 டிகிரி குளிரையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் திரளாக வந்து விழாவில் பங்கேற்றனர். கார்த்திகை தீபம் என்பது தமிழ்நாட்டில் குறிப்பாக கலாச்சார மற்றும் ஆன்மீக முக்கியத்துவத்தைக் கொண்ட தீபங்களின் திருவிழாவாகும். திருவிழா ஸ்ரீ. சிவா மற்றும் ஸ்ரீ.கார்த்திகேயன் இருள் நீங்கி ஒளி பரவுவதை குறிக்கும் வகையில் தீபங்கள் ஏற்றி விழா கொண்டாடப்பட்டது. மகா தீபாராதனையுடன் நிகழ்ச்சி நிறைவடைந்து, பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. அனைத்து பூஜைகளையும் மணிகண்டன் சர்மா, மோஹித் மிஸ்ரா மற்றும் ஸ்ரீ பிரஹலாதன் ஆகியோர் செய்தனர். - நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்