500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ விஸ்வநாதர் சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம்
500 ஆண்டுகள் பழமை வாய்ந்த முளப்பாக்கம் ஸ்ரீ விஸ்வநாத சுவாமி ஆலயம் உள்ளது. (முந்தைய பெயர் சொக்கநாதர் கோயில்) காலப்போக்கில் விஸ்வநாதர் கோயில் என்று மாறிவிட்டது. இது 500 வருட பழமையான கோயில் ஆகும். இந்த ஆலயக் கும்பாபிஷேகம் 160 ஆண்டுகளுக்கு பிறகு, 23 ஏப்ரல் 2025, புதன்கிழமையன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் இதைக் கண்டு களித்தனர். கோவில் கும்பாபிஷேகம் என்பது இந்து கோவில்களில் ஒரு பெரிய விழாவாகும். இது கோவிலில் உள்ள தெய்வங்களின் சக்தியை மேலும் அதிகரிக்கவும், கோவிலின் புனிதத்தன்மையை நிலைநிறுத்தவும் நடத்தப்படுகிறது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டிய ஒரு சடங்காகும். காலை விக்னேஸ்வர பூஜை மற்றும் ஹோமங்களுடன் சடங்குகள் தொடங்கின. விஸ்வநாத சுவாமி ராஜகோபுரங்கள், விமான கோபுரங்கள், மூலஸ்தான பிரதான மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடந்து மகாபிஷேகம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பரம்பரை அறங்காவலர் எல். சூரியா, ஆன்மிக சான்றோர்கள், முக்கிய பிரமுகர்கள், முளப்பாக்கம் கிராமவாசிகள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஏற்பாடுகளை நேயம் அறக்கட்டளை நிர்வாகி முருகன் பழனிவேல் செய்திருந்தார். - நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்