உள்ளூர் செய்திகள்

மிருத்யுஞ்சய ஹோமம்

புதுடில்லி : சரோஜினி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் ஆடி மாதத்தை ஒட்டி, சீனிவாச சாஸ்திரிகள் மற்றும் ராகவ சாஸ்திரிகள் தலைமையில் மிருத்யுஞ்ஜய ஹோமம் மிக விமரிசையாக நடைபெற்றது. ரித்விக்குகள் மற்றும் வேத விற்பன்னர்கள் பலர் இதில் பங்கேற்று ருத்ர பாராயணம் செய்தனர். சுற்று வட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் ஹோமத்தில் பங்கேற்று விநாயகரை வழிபட்டுச் சென்றனர். - நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !