உள்ளூர் செய்திகள்

புதுடில்லி ஹரிநகர் நாராயணி மந்திரில் நாம சங்கீர்த்தனம்

புதுடில்லி ஹரிநகர் நாராயணி மந்திரில் 'நாம சங்கீர்த்தனம்'புதுடில்லி : ஹரி நகரில் உள்ள நாராயணி மந்திரில் அக்-12ம் தேதி உடையாளூர் டாக்டர் கே. கல்யாணராமன் பாகவதர் குழுவினரின் நாம சங்கீர்த்தன பஜனை நடைபெற்றது.பாகவதருக்கு பூரண கும்ப மரியாதை செலுத்தப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது. டெல்லி மற்றும் NCR பக்தர்கள், இசை ஆர்வலர்கள் இதில் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஸ்ரீ ராமநவமி மஹோத்சவ சமிதி (SRMS) செய்திருந்தது.நாம சங்கீர்த்தனம் சிறந்த முறையில் நடந்தேற உதவிய அனைவருக்கும்ஸ்ரீ ராமநவமி மஹோத்சவ சமிதிநன்றியை தெரிவித்தது.- புதுடில்லியில் இருந்து நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !