உள்ளூர் செய்திகள்

சாலிமார் பாக் ஸ்ரீ மீனாட்சி கோவிலில் பாதுகை பூஜை

புதுதில்லி: காஞ்சி ஸ்ரீ மகா பெரியவரின் 134 ஆவது ஜெயந்தியை முன்னிட்டு, சாலிமார் பாக்கில் அமைந்துள்ள ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், குருஜி பிரம்மஸ்ரீ ஜி.கே.சீதாராமன் தலைமையில் 7 ஜூன் மாலை பாதுகை பூஜை நடந்தது. அருண் சாஸ்திரிகள் பூர்ணகும்பத்துடன் வரவேற்றார். பாத பூஜை, குருவின் தாமரை பாதங்களில் பக்தி மற்றும் நன்றியுணர்வுடன் மரியாதை செலுத்துவதாகும். விக்னேஸ்வர பூஜையுடன் வழிபாடு துவங்கியது. அதைத் தொடர்ந்து, ஸ்ரீ ருத்ர ஜபம் மற்றும் ருத்ர சமகம் பாராயணம் நடைபெற்றது. ஆரம்ப பூஜைக்குப் பிறகு, ஸ்ரீ மகா பெரியவரைப் பற்றியும், வேதங்கள் மற்றும் பாட சாலையின் முக்கியத்துவம் பற்றியும் குருஜி விளக்கினார். கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் திரளாக இதில் கலந்து கொண்டு ஆசி பெற்றனர். பாதுகை பூஜை பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேறவும், நல்ல பலன் பெறவும் மகா பெரியவா பாதுகையை வழிபடுகிறார்கள். - நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !