உள்ளூர் செய்திகள்

நொய்டா முருகன் கோவிலில் மூக பஞ்ச சதி ஸ்லோகம் வாசிப்பு

உலகளாவிய அமைதி மற்றும் மனிதகுலத்தின் நலனுக்காக, குரு ஸ்ரீமதி ரேவதியின் மாணவர்கள், மூகபஞ்சசதி, ஆர்ய ஷதகம், பதராவிந்த ஷதகம், மற்றும் கடாக்ஷ ஷதகம் ஆகியவற்றை, செக்டார் 62, நொய்டா, ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ கார்த்திகேயா கோவில் வளாகத்தில் வாசித்தனர். கடும் மழையையும் பொருட்படுத்தாமல், எல்லோரும் வந்திருந்து ஸ்லோகம் வாசிப்பதில் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து மஹா தீபாராதனை, பக்த்தர்களுக்கு மஹா பிரசாதம் வழங்கப்பட்டது. - நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !