உள்ளூர் செய்திகள்

சாலிமார் பாக் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூரம்

ஆடிப்பூரத்தை முன்னிட்டு சாலிமார் பாக்கில் அமைந்துள்ள ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் விசேஷ பூஜைகள் நடந்தன. வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டு ஸ்ரீ மீனாட்சி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மலர் அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது. பக்தர்கள் திரளாக இதில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஆடிப்பூரம் என்னும் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுவது. இது தேவிக்குரிய திருநாளாகும். இந்த நாளில் தான் உமாதேவியும் தோன்றியதாக கூறப்படுவதுண்டு. உலக மக்களை காக்க சக்தியாக அம்பாள் உருவெடுத்தாள். சித்தர்களும், யோகிகளும் இந்த நாளில் தவத்தை துவக்குவதாக புராணங்கள் கூறுகின்றன. - நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !