உள்ளூர் செய்திகள்

நொய்டா கோயிலில் சங்காபிஷேகம்

நொய்டா கோயிலில் சங்காபிஷேகம் கார்த்திகை மாதத்தின் கடைசி திங்கட்கிழமையை முன்னிட்டு, நொய்டாவில் உள்ள ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ கார்த்திகேயா கோவிலில், 108 சங்குகளால், கங்கை நீர் நிரப்பப்பட்ட சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. சந்தனம், குங்குமம் ரோஜாப் பூக்களுடன் அனைத்து சங்குகளில் வைக்கப்பட்டிருந்ததை காண முடிந்தது . அபிஷேகம் முடிந்தவுடன், ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அனைத்து பிரபலமான சிவன் கோவில்களில் செய்வது போலவே, எல்லா பூஜைகளும் நடந்தன. மேலும், வேதிக் பிரசார் ஆஸ்தான வாத்தியார் : ஸ்ரீ ஸ்ரீராம் சாஸ்திரிகளின் மேற்பார்வை மற்றும் வழிகாட்டுதலின் கீழ், கோயில் வாத்தியார்கள் : ஸ்ரீ மணிகண்டன் சர்மா மற்றும் ஸ்ரீ மோஹித் மிஸ்ரா ஆகியோர் உதவியுடன் அபிஷேகம் செய்யப்பட்டது. கடும் குளிர் மற்றும் காற்றின் தரம் குறையாமல், திரளான பக்தர்கள், காலையில் கோயிலுக்குச் சென்று, அனைத்து பூஜைகளிலும் பங்கேற்றது மட்டுமின்றி, சிவனை துதித்து பல்வேறு ஸ்லோகங்கள் பாடினர். மஹா தீபாராதனையுடன் பூஜை நிறைவடைந்து, அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. - நொய்டாவில் இருந்த நமது செய்தியாளர் வெங்கடேஷ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !