உள்ளூர் செய்திகள்

ஹஸ்தலில் சாஸ்தா பிரீத்தி கொண்டாட்டம்

ஹஸ்தலில் சாஸ்தா பிரீத்தி கொண்டாட்டம்புதுடில்லி ஹஸ்தலைச் சார்ந்த ஸ்ரீ தர்மசாஸ்தா சேவா சமிதி சாஸ்தா ப்ரீத்தியை டிச-14 அன்று வெகு விமரிசையாக கொண்டாடியது.கணபதி ஹோமம் மற்றும் உஷா பூஜையுடன் நிகழ்ச்சி தொடங்கியது.உஷா பூஜை இந்து கோவில்களில், குறிப்பாக சபரிமலை ஐயப்பன் கோவிலில், அதிகாலையில் சூரிய உதயத்தின் போது நடைபெறும் ஒரு முக்கியமான பூஜை. இது ஒரு நாளின் தொடக்கத்தைக் குறிப்பதுடன், பக்தர்களுக்கு புத்துணர்ச்சி மற்றும் உத்வேகத்தை அளிக்கிறது, மேலும் இது ஐயப்பனின் தினசரி வழிபாட்டின் ஒரு பகுதியாகும். அதைத் தொடர்ந்து, லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை, விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம், பாகவத பாராயணம், ஜயப்ப பஜனை, சாஸ்தா பிரீத்தி மற்றும் ஓட்டன் துள்ளல் போன்ற பல்வேறு கலை/இசை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம சத்சபா, ஹஸ்தல், பாரதி பாலகோகுலம் பஜனை சமிதி, ஹஸ்தல், கலா மண்டலம் கவிதா கீதாநந்தன் குழவினர், குருவாயூர், ஆகியோர் இந்த கலாச்சார நிகழ்வில் பங்கேற்றனர்.ஐயப்ப பக்தர்கள் மற்றும் இசை ஆர்வலர்கள் இதில் திரளாக கலந்து கொண்டனர்.- புதுடில்லியிலிருந்து நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !