உள்ளூர் செய்திகள்

நொய்டா கோவிலில் ஸ்ரீ ஹனுமன் ஜெயந்தி

நொய்டா, செக்டார் 62 ல் உள்ள ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ கார்த்திகேயர் கோவிலில், ஸ்ரீ சாந்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. காலையில் மஞ்சள் பொடி, தேன், பஞ்சாமிர்தம், பால், தயிர், நெய், இளநீர், பழச்சாறு, சந்தனம், குங்குமம், புனித கங்கை நீர் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அபிஷேகம் முடிந்ததும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சகஸ்ரநாம அர்ச்சனை, மகா தீபாராதனையுடன் நிகழ்ச்சி நிறைவடைந்து, பிரசாதம் வழங்கப்பட்டது. ஹனுமானை வணங்குவதால் புத்தி, பலம், புகழ், குறிக்கோளை எட்டும் நேரம், அஞ்சா நெஞ்சம், ஆரோக்கியம், விழிப்புணர்வு, வாக்குசித்தி, ஆகியவற்றைப் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மாலையில் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் அலங்காரம் செய்யப்பட்டது. 1008 வடை மாலை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு மாலையாக சாத்தப்பட்டது. கடும் குளிர் மற்றும் காற்றின் தரம் குறைந்திருந்த போதிலும், திரளான பக்தர்கள் கோவிலுக்கு சென்று அனுமன் சாலிசா பாராயணம் செய்தனர். அனைத்து பூஜைகளும் ஷங்கர் (ஆஸ்தான வாத்தியார்), கோவில் வாத்தியார்கள் மணிகண்டன், மோஹித் மிஸ்ரா உதவியுடன் நடந்தன. மஹா தீபாராதனையுடன் நிகழ்ச்சி நிறைவடைந்து அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. - புதுடில்லியிலிருந்து நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !