ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
ஆடி மாதத்தை முன்னிட்டு, தில்லி க்யாலாவில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோவிலில் காலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நெய், பால், சந்தனம், இளநீர், பன்னீர், மஞ்சள் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு, அம்பாளுக்கு அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்கார பூஜையும் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து விஷ்ணு சகஸ்ரநாமம் மற்றும் லலிதா சகஸ்ரநாம பாராயணம் நடைபெற்றது. ஆர். கே. புரத்தை சார்ந்த துர்கா மண்டலி மற்றும் விஷ்ணு சஹஸ்ரநாம சத்சங்கம், விகாஸ்புரி குழுவினர்கள் இதில் திரளாக பங்கேற்று பாராயணம் செய்தனர். நுாற்றுக்கணக்கான பக்தர்கள் இந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்டனர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. - நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்