உள்ளூர் செய்திகள்

சரோஜினி நகர் தென்னிந்திய சமாஜத்தில் ஸ்ரீராம நவமி கொண்டாட்டம்

புது தில்லி : தென்னிந்திய சமாஜத்தால் கொண்டாடப்படும் மிக முக்கியமான விழாக்களில் ஸ்ரீராம நவமாலை விழாவும் ஒன்று. இந்த ஆண்டு ஸ்ரீராம நவமி ஏப்ரல் 17ம் தேதியன்று காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. இதையடுத்து பகவான் ஸ்ரீராமருக்கு லட்சார்ச்சனையும் நடந்தது. நேற்று மதியம் சுதர்சன ஜபம் நடைபெற்றது. ரிக் வேதிகள் திரளாக இதில் பங்கேற்று ஜபம் செய்தனர். இன்று காலை சுதர்சன ஹோமம் மற்றும் பூர்ணாஹூதியுடன் நிறைவுற்றது. சுதர்சன ஹோமம் சக்தி நிறைந்தது.இந்த ஹோமம் செய்வதால் சத்ரு பயம் நீங்கும்; தீவினைகள் அகலும். இந்த ஹோமத்தின்போது, அறுகம்புல்லை பசும்பாலில் முக்கி எடுத்து அக்னியில் சேர்த்துச் செய்யப்படும் பிரார்த்தனையால் தீர்க்க ஆயுள் கிடைக்கும். "ஸ்ரீராம நவமாலை" இந்த மாதம் 21ம் தேதி வரை நடத்த சமாஜம் ஏற்பாடு செய்துள்ளது.- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !