சரோஜினி நகர் ஸ்ரீ விநாயகர் கோவிலுக்கு சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு விஜயம்
வட இந்தியாவில் விஜய யாத்திரை மேற்கொண்டிருக்கும் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானம், புதுடில்லி சரோஜினி நகரில் உள்ள ஸ்ரீ சித்தி புத்தி அம்பாள் சமேத கற்பக விநாயகர் கோவிலுக்கு நவ-17 அன்று விஜயம் செய்தார். ஜகத்குருவை பூர்ண கும்ப ஸ்வாகதத்துடன் வரவேற்றனர். பின்னர் ஸ்ரீ மஹாசன்னிதானம் கற்பக விநாயகர், ஆஞ்சநேயர், நவக்கிரஹ சன்னதிகளில் தரிசனம் செய்தார். இந்த நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர், மேலும் ஜகத்குரு மகாஸ்வாமி தனது ஆசிகளைப் பெற வந்த ஏராளமான பக்தர்களைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தார். பக்தர்கள் எல்லா நன்மைகளும் பெறும் வகையில் கருணைகூர்ந்து அனுகிரஹ பாஷணம் சமஸ்கிருத உரையில் வழங்கி தமது அருளாசிகளை பொழிந்தார்கள்!- புதுடில்லியிலிருந்து நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்