உள்ளூர் செய்திகள்

புதுடில்லி ஸ்ரீ மூகாம்பிகை கோவிலுக்கு சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு விஜயம்

வட இந்தியாவில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானம், புதுடில்லி விகாஸ்புரி, ஸ்ரீ மூகாம்பிகை கோவிலுக்கு, நவ-13 அன்று விஜயம் செய்தார். அவருக்கு பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பு நிகழ்ந்தது. அதைத் தொடர்ந்து, கல்யாண கணபதி, தேவி மூகாம்பிகை, சுப்பிரமணியர், சன்னதிகளுக்கு அவர் சென்று மாலை அணிவித்து, தீபாராதனை காட்டி தரிசனம் செய்தார். வேத கோஷங்கள் முழங்க, பிராத்தனை பாடல்களுடன், கோவில் டிரஸ்டி திரு. ரமாபதி ராவ் வரவேற்பு உரை வழங்கினார். பிறகு ஜகத்குருவின் அனுகிரஹ பாஷணம் நிகழ்ந்தது. இந்த நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.அனைவருக்கும் சுவாமிகள் பிரசாதம் வழங்கி பக்தர்கள் எல்லா நன்மைகளும் பெறும் வகையில் கருணைகூர்ந்து தமது அருளாசிகளை பொழிந்தார்கள்! - புதுடில்லியில் இருந்து நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்