உள்ளூர் செய்திகள்

நொய்டா கோவிலில் தைத்திரீய உபநிஷத் வாசிப்பு

நொய்டா செக்டர் 62 ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ கர்த்திகேயா கோயிலில், காஞ்சி காமகோடி பீடாதிபதி 71 வது சங்கராச்சாரியாரியாவின் அபிஷேகத்தையொட்டி, ஸ்ரீ தைத்திரீய உபனிஷத் வாசிக்கப்பட்டது. உபநிஷத் பாராயணத்தை வேதிக் பிரச்சார் சன்ஸ்தானின் தலைவர் ரவி பி சர்மா, கோயில் வாத்தியார்கள் மணிகண்டன் சர்மா, மோஹித் மிஸ்ராவின் உதவியுடன் வாசித்தனர். இந்த சந்தர்ப்பத்தில் ஸ்ரீ சங்கராச்சாரியாக்களின் அலங்கரிக்கப்பட்ட படங்கள் வைக்கப்பட்டிருந்தது . மேலும், பக்தர்கள் ஜெய ஜெய சங்கரா, ஹர ஹர சங்கரா கோஷமிடுவதையும் காண முடிந்தது. இந்த நிகழ்வு மகா தீபாராதனையுடன் முடிவடைந்தது, பிரசாதம் அனைத்து பக்தர்களுக்கும் விநியோகிக்கப்பட்டது. காலையில் ​​அக்ஷயா திரிதியை முன்னிட்டு, அன்னதானம், ஐநூறுக்கும் மேற்பட்டவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. - நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !