ஸ்ரீ ருக்மணி கல்யாணம்
சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள சுந்தர பாண்டுரங்க கோவிலில், 2024-ம் ஆண்டின் கடைசி ஆஷாட ஏகாதசியை முன்னிட்டு, ஜூலை 15ம் தேதி, பஜனை சம்பிரதாயப்படி, ஸ்ரீ ருக்மணி கல்யாணம் மிக விமரிசையாக நடைபெற்றது. ஏற்பாடுகளளை பாண்டுரங்க கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர். சென்னை கானஸ்மிருதி பஜனை மண்டலியினர் இதனை சிறப்பாக நடத்தி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். ரகுமாயி சமேத பாண்டுரங்கன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. - நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்