இன்றைய போட்டோ
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 107வது பிறந்த நாளை முன்னிட்டு, வடசென்னை வடக்கு - கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், புதுவண்ணாரப்பேட்டையில் மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் 10,107 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று இரவு நடந்தது. இதில் அ.தி.மு.க. பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு,10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
01-02-2024 | 04:00
மேலும் இன்றைய போட்டோ
திருப்பூர், குமரன் சிலை முன் சி.ஐ.டி.யூ.,சார்பில் அனைத்து பிரிவு தொழிலாளர்களுக்கும் கூடுதல் போனஸ் வழங்கிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
06-10-2025 | 18:47
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாமக நிறுவனர் ராமதாசை, முதல்வர் ஸ்டாலின் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார்.
06-10-2025 | 14:32
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் உடல்நலம் குறித்து அவரது குடும்பத்தினரிடம் முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.
06-10-2025 | 14:25
மேற்கு வங்கத்தில் லட்சுமி பூஜை இன்று கொண்டாடப்படுகிறது. இதற்காக களிமண்ணால் செய்யப்பட்ட லட்சுமி சிலையை வாங்கி சென்ற இளம்பெண். இடம்: நாடியா, மேற்குவங்கம்.
06-10-2025 | 08:40
காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் ஆத்தூர் ஊராட்சியில், மழை நீர் வடிகால்வாயில் செடிகள் வளர்ந்து தண்ணீர் செல்ல முடியாத நிலை இருந்தது. நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக வடிகால்வாய் சீரமைக்கப்பட்டு உள்ளது.
06-10-2025 | 08:39
தொடர் விடுமுறைக்கு சொந்த ஊர் சென்றவர்கள் சென்னைக்கு திரும்பிய நிலையில் குரோம் பேட்டை ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
06-10-2025 | 08:39