இன்றைய போட்டோ
இயக்குனர் கே. சுப்பிரமணியம் நினைவு அறக்கட்டளை மற்றும் நாரக கான சபா சார்பில் இயக்குனர் கே.சுப்பிரமணியத்தின் 120வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் நாதஸ்வர வித்வான் எஸ்.ஆர்.ஜி. ராஜன்னா, நடன கலைஞர் என்.எஸ். ஜெயலட்சுமி, மேடை நாடக கலைஞர் காத்தாடி ராமமூர்த்தி, மேடை நாடக இயக்குனர் குடந்தை மாலி ஆகியோருக்கு இயக்குனர் கே. சுப்பிரமணியம் நினைவு விருதுகள் வழங்கப்பட்டன. மேடையில் விருதாளர்களுடன் (இடமிருந்து - வலம்) எம்.ஜி.ஆர். ஜானகி கலை அறிவியல் கல்லூரியின் தலைவர் குமார் ராஜேந்திரன், சிட்டி யூனியன் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி காமகோடி , நாரத கான சபா செயலர் ரவிச்சந்திரன், இயக்குனர் கே. சுப்பிரமணியம் நினைவு அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் பத்மா சுப்பிரமணியம், திரைப்பட இயக்குனர் எஸ்.பி. முத்துராமன், ரஷ்ய கலாச்சாரம் மற்றும் நண்பர்கள் சொசைட்டியின் செயலர் ஜெனரல் பி.தங்கப்பன்.இடம்: டி.டி.கே. சாலை, சென்னை.
20-04-2024 | 22:22
மேலும் இன்றைய போட்டோ
குளத்தில் நின்றபடி சூரிய பூஜை! சத் பூஜையை முன்னிட்டு கோவை குறிச்சி குளத்தில் நீரில் நின்றபடி சூரியனை வழிபட்டு பிரார்த்தனையில் ஈடுபட்ட கோவை வாழ் பீஹார் மற்றும் உ.பி.,யை சேர்ந்த வட மாநிலத்தவர்கள்.
28-10-2025 | 13:40
அரசமரத்தடி விநாயகர் கோவிலில், வள்ளி, தெய்வாணை சமயதராய் முருகபெருமான். இடம்: .திருப்பூர்
28-10-2025 | 13:39
கந்த சஷ்டியை முன்னிட்டு, வடபழனி முருகன் கோவிலில், சூரசம்ஹார நிகழ்ச்சி (அக்-27) விமரிசையாக நடந்தது.
28-10-2025 | 12:06
கோவை விமான நிலையத்தில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை பூங்கொத்து கொடுத்து தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்றார்.
28-10-2025 | 11:25